குலுங்க போகும் சென்னை.. இன்று 2வது நாளாக 4 இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு! பலத்த பாதுகாப்பு
சென்னை: சென்னையில் இன்று 2வது நாளாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 4 இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் ட்ராலி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயமாகும்.

அதன்படி சென்னையில் பொது இடங்களில் 1,500 விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிவடைந்த நிலையில் சிலையை கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் கடலில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க நேற்றும், இன்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாளில் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இன்று 2வ நாள் விநாயகர் ஊர்வலம் சென்னையின் பல இடங்களில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலை கரைப்பு பகுதிகளில் விபத்துகளை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் ட்ராலியும், பிரம்மாண்ட சிலைகளை தூக்கி சென்று கரைக்க கிரேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகள்காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாப்புலர் எடைமேடை பின்புறத்திலும் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீலாங்கரை, காசிமேடு பகுதிகளில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. இதற்காக தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் 18,500 போலீஸார், ஆவடியில் 2,080 போலீஸார், தாம்பரத்தில் 1,500 போலீஸார் என மொத்தமாக 22,080 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் வடபழனி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, திநகர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, புதுப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, அயனாவரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட உள்ளது.
அதேபோல் நீலாங்கரை கடற்ரையில் அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளும், திருவொற்றியூர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாப்புலர் எடைமேடை பின்புறத்திலும் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications