சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் துணை மின்நிலையத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்நிலையில் தான் சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANEDCO) எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் 110 கி.வோ உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் பணி மற்றும் ஏபி சுவிட்ச் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
அதன்படி பட்டாபிராம் மற்றும் சக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மதியம் 12 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். ஏரியா வாரியாக பார்த்தால் பராமரிப்பு பணியின் காரணமாக பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன்நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், தெற்கு பஜார் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
அதேபோல் வள்ளலார் நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சிடிஎச் சாலை, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி நகர், ஐஏஎஃப் சாலை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும் மதியம் வரை மின்தடை ஏற்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை அறிவிப்பால் பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இன்று காலை 9 மணிக்கே பயன்படுத்தி கொள்வது நல்லது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications