சென்னையில் அழகி ஆசை.. தி நகர் பிரபல ஜவுளிக்கடை மேலாளருக்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள துணிக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வரும் இளைஞருக்கு பேஸ்புக்கில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பணம் அனுப்பினால் அழகிய பெண்களை உல்லாசத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை நம்பி அந்த வடமாநில இளைஞர் ரூ.28 ஆயிரத்தை Gpay-ல் அனுப்பி உள்ளார். ஆனால் வரவில்லை.. இதனிடையே மீண்டும் கேட்டதும், அந்த ஃபேக் ஐடி வேதிப்பொருளை வாங்கி சர்க்கரையுடன் கலந்து கையில் தேய்த்தால் உடனே பெண் வரும் என கூறியுள்ளார்; அதையும் அப்படியே வடமாநில இளைஞர் செய்துள்ளார். அவருக்கு கை முழுவதும் கொப்புளங்கள் தான் வந்துள்ளது.
இன்றைக்கு பெண் ஆசை, மண் ஆசை, பொன் ஆசை இதில் எதாவது ஒன்றில் விழுந்தவர்கள் மீண்டு வருவது கடினம். அதிலும் பெண் ஆசை மோசமானது. அதற்கு மயங்கி பணம்,நகையை இழந்தவர்கள் மிக அதிகம். ஏன் ராஜியத்தையே இழந்த மன்னர்களும் அதிகம். இன்று வரை பலர் பெண்ணாசையில் பணத்தை தொலைக்கிறார்கள். சென்னை திநகரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

செல்போனுக்கு வந்த அழைப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள துணிக்கடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் பக்கத்தில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் 'பணம் அனுப்பினால் இளம்பெண்கள் அனுப்பி வைக்கப்படும்' என்ற வாசகத்துடன் இருந்திருக்கிறது. இதனை பார்த்த ஜவுளிக்கடை மேனேஜர் அதனை உண்மை என நம்பி அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
ஆசை வார்த்தை
இதனிடையே போனில் கவர்ச்சிகரமாக பேசிய மர்ம நபர் 'பணம் அனுப்பினால் அழகிய இளம் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம்' என்றாராம். அத்துடன் ஜவுளிக்கடை மேனேஜரிடம் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களின் படங்களையும் அனுப்பினாராம். அதை நம்பி அந்த ஜவுளிக்கடை மேலாளர் மர்ம நபர் கூறிய எண்ணுக்கு பணம் அனுப்பி, தான் தங்கியுள்ள இடத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தாராம். அதற்கு 'இன்னும் 28 ஆயிரம் ரூபாய் அனுப்பினால் கண்டிப்பாக அனுப்பி வைப்போம்' என கூறி மேலும் பணத்தை கேட்டாராம். அவருடம் இளம்பெண்களுடன் இருக்கலாம் என்ற ஆசையில் பணத்தை அனுப்பி உள்ளார்.
அழகி வரவில்லை
ஆனால் அவருக்கு அடுத்த நடக்க போவது தெரியவில்லை. ஏனெனில் அவர் சொன்னபடி அழகியை அனுப்பி வைக்கவில்லை. இதனால் மீண்டும் மர்ம நபரை தொடர்பு கொண்ட வாலிபர் 'பணத்தை அனுப்பி விட்டேன் ஏன் இன்னும் வரவில்லை' என கேட்டதற்கு, 'மருந்து கடைக்கு சென்று பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் வாங்கி சர்க்கரையுடன் சேர்த்து உடலில் தேய்த்து தயாராக இருங்கள் அழகிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
புண் தான் வந்தது
தொடர்ந்து அந்த ஜவுளிக்கடை மேனேஜர் கண்மூடித்தனமாக நம்பி, வேதிப்பொருளை வாங்கி உடலில் தேய்த்திருக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் உடல் முழுவதும் கொப்பளங்களாக வீங்கியது. அதன்பிறகே இளம்பெண்கள் வரவில்லை உடம்பு புண்ணுதான் வந்தது என்பதை உணர்ந்தார். வலியால் துடித்த அவரை நண்பர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஜவுளிக்கடை மேலாளரின் புகாரின்பேரில் அசோக் நகர் போலீசார் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரத்தை வைத்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications