கோவையில் ஷாக்.. ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா.. கிராமத்திற்கு சீல் வைப்பு.. எப்படி பரவியது?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கோவை அன்னூர் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறையக் குறைய இந்த ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த ஊரடங்கு தற்போது வரும் நவ.15ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேக்சின் பணிகள் காரணமாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் மொத்தம் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 835 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது சற்றே நிம்மதியைத் தருகிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிராமம்
கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கு கீழாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அங்கு அன்னூர் அருகே ஒரே கிராமத்தில் வெறும் மூன்று நாட்களில் மட்டும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பொகளூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கட்டாம்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி தீபாவளியன்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

29 பேருக்கு கொரோனா
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் கிராமத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதனையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரே கிராமத்தில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
Recommended Video

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து தொற்று கண்டறியப்பட்டவர்களை அவர்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு கோவை ESI மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடீசியா கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து பொகளூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராமம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும், சொக்கட்டாம்பள்ளி கிராமத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் முள்வேலிகளால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கிராமத்திற்குச் சீல்
மேலும், அக்கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வெளியூர் பொதுமக்களும் இக்கிராமத்தினுள் நுழைய வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினரின் விசாரணையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காளிகுளம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் இல்ல துக்க நிகழ்விற்குச் சென்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

பெண் உயிரிழப்பு
இதற்கிடையே அங்கு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வந்த 30 வயதான சித்திரா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பெண் வசித்த வீடு இருக்கும் பகுதியிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, தூய்மைப்பணி செய்யப்பட்டது. அந்தப் பெண் கொரோனாவால் உயிரிழந்ததால் பெண்ணின் உடல் உறவினர்களிடம் தரப்படவில்லை. கோவையில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அன்னூர் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications