Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகளவில் ஓரங்கட்டப்பட்ட இந்தியா.. அட, தமிழ்நாடுதான் ஃபர்ஸ்ட்- தி பெஸ்ட் திராவிட ஆட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலவிதங்களில் தமிழ்நாடுதான் முதலிடம். இப்போது பாலின சமத்துவத்தில்கூட இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப். இதை நாம் சொல்லவில்லை. சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகள் தட்டிவிட்டுள்ளன.

சர்வதேச மகளிர்தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ""இந்த நாட்டின் வளர்ச்சி மகளிர் கையில்தான் உள்ளது. மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் சங்ககாலம் முதலே பெண்கள் உயர்வாகவும் மதிக்கத்தக்கவராகவும் போற்றப்பட்டு வருகின்றனர். அந்தக் காலத்திலேயே பெண்பால் புலவர்கள் மிகுதியாகச் செய்யுள் இயற்றியுள்ளனர். மன்னனையே கேள்வி கேட்டும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.

இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போரைத் தடுப்பதற்கான தூது போகக் கூடிய துணிச்சல் ஔவைக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புக்களால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். அடக்கப்பட்டார்கள். இதிலிருந்து பெண்ணை விடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது. அதுதான் திராவிட இயக்கம்" என்று பேசினார்

 உலக அளவில் மாஸ் காட்டும் தமிழச்சிகள்:

உலக அளவில் மாஸ் காட்டும் தமிழச்சிகள்:

மேலும் அவர், , "பெண்கள் பலர் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆனாலும் பெண்களை ஆண்கள் இன்னும் மனதளவில் அடிமையாகவே கருதுகின்றனர்" என்றும் குறிப்பிட்டுப் பேசினார். பாலின ரீதியான சமத்துவத்தை அடைவது இந்தியாவில் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. ' உலகப் பொருளாதார மன்ற'மானது (The World Economic Forum) பொருளாதாரத்தில் நிலவும் பாலின இடைவெளியைப் பற்றிய 2022 ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் அரசியல் ஆகிய 4 பரிமாணங்களில் நிலவும் பாலின சமத்துவத்தைப் பற்றி ஆராய்ந்துள்ள. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியா, பாலின பொருளாதார சமத்துவத்தில் 135வது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்தில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விட இந்தியா 143வது இடத்தில் பின் தங்கியுள்ளது.

பொருளாதார மட்டத்தில் பெண்களின் பங்கேற்பு விகிதாச்சாரம் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுகள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட McKinsey இன் தேசிய அளவிலான ஆய்வில், தொழிலாளர்களில் பாலின சமத்துவமின்மையை அளவிட்டது. அதில் இந்தியாவில் பாலின சமத்துவத்திற்கான சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டையும் கேரளாவையும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 32%, ஆக உள்ளது என்றும் இது இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேரும் பெண்களின் மொத்த சேர்க்கை 49% ஆக உள்ளது என்றும் இது (GER) இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது 25% ஆக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கொண்டு 2019-2020 ஆண்டுக்கான தொழில்துறை சார்ந்த ஆய்வில், உற்பத்தித்துறை சார்ந்து பணிபுரியும் 100 இந்திய பெண்களில், 43 பேர் தமிழ்நாட்டுப் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாத ஊதியம் பெறும் வேலைகளிலுள்ள பெண்கள் பலர் கோயம்புத்தூர் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 இதிலும் முன்னோடி மாநிலமா தமிழ்நாடு?

இதிலும் முன்னோடி மாநிலமா தமிழ்நாடு?

ஹெல்த் விசயங்களைப் பொறுத்தவரை, 2019-20 ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு மூலம் சில விளக்கங்கள் கிடைத்துள்ளன. தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, கருத்தடையைப் பயன்படுத்துபவர்கள், பிரசவத்திற்கு முன் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் மருத்துவமனையில் பிரசவம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய சராசரி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, பிரசவத்தின் போது ஏற்படும் குழந்தை இறப்பு மற்றும் தாய் இறப்பு விகிதமும் தமிழ்நாட்டில் மிகமிக குறைவாகவே உள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆண்டுவருவதால் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் இவை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் திராவிட இயக்கம் முன்னோடியாக திகழ்கிறது என்றும் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பகுத்தறிவு ஆகிய வாதத்தை முன்வைத்து, இந்த இயக்கம் ஆணாதிக்கத்தைப் போக்கியுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத் தலைவர் பெரியார், 'பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்து வழங்கப்படாவிட்டால், இந்தியா உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க முடியாது' என்று நம்பினார். இந்தக் கருத்தியல் இவர் வழிவந்த திராவிடக் கட்சிகளின் கொள்கை வகுப்புகளில் தொடர்ந்து வெளிப்பட்டுள்ளது என்றும் அந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது.

1967 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அண்ணா தலைமையிலான முதல் திமுக அரசு விதவை மறுமணங்களை ஆதரித்ததுடன், அர்ச்சகர்கள் இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

1969 ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பிறகு, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அண்ணாவின் முயற்சிகள் மு. கருணாநிதியால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.

1975 இன் விதவை மறுமணத் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். அது விதவைகளுக்கு இழப்பீடு வழங்கியது. மேலும் அவர்களின் மறுமணத்தையும் ஆதரித்தது. இந்து வாரிசு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம்1989, மூதாதையர்களின் சொத்தில் பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்பதை உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் இவ்வாறு சட்டம் இயற்றிய முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான்.

 திரும்பிப் பார்க்கவைத்த பெண்கள் நலத் திட்டங்கள்:

திரும்பிப் பார்க்கவைத்த பெண்கள் நலத் திட்டங்கள்:

1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம், எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்கள் திருமணம் செய்துகொள்ள ரூ 5,000 உதவித் தொகை வழங்கியது. இது பெண்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களித்தது.

கூடுதலாக, நாகம்மையார் நினைவு பெண்களுக்கான இலவச பட்டதாரி கல்வித் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் முன்மாதிரியான ஜி.இ.ஆர். கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நலத் திட்டம் ஆகியவை பெண்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றியுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து குடும்பங்களுக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார். அப்போது அத்திட்டம் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் அரசு இலவச பொருட்களை வழங்கலாமா? வேண்டாமா? என்று நடைபெறும் விவாதங்களில் இன்றுவரை அதைச் சிலர் குறிப்பிட்டுப் பேசியும் வருகின்றனர்.

ஆயினும், 2009 ஆம் ஆண்டு Oxford University Press' Quarterly Journal of Economics காலாண்டிதழ் வெளியிடப்பட்ட ஆய்வில், கிராமங்களில் அறிமுகம் செய்யப்பட்ட தொலைக்காட்சி திட்டமானது பெண்கள் மீதான, குடும்ப வன்முறை மற்றும் ஆண் குழந்தைகள் மீதான ஒருபக்கச் சார்பு மனநிலை ஆகியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கைக் குறைத்துள்ளது என்றும் பெண்களின் சுயாட்சியை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இத்தகைய திட்டங்கள் ஏற்படுத்திய மறைமுக தாக்கமானது அதிக வாய்ப்புகளைப் பெண்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கு அரசுக்கு உதவி செய்துள்ளதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும் இதே கருத்தைத்தான் வலுப்படுத்தியுள்ளார். அவரது 2021 ஆம் ஆண்டு பெண்களுக்கான புதிய கொள்கையானது, பெண்களைக் கட்டுப்படுத்தும் பாலின விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறது.

 70 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனையா?

70 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனையா?

அவரது ஆட்சிக்காலத்தில்தான், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து 12 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டது. இது இந்தியாவிலேயே மிக அதிகமாக வழங்கப்படும் விடுப்புக் காலவரம்பு ஆகும்.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33. 3% ஆகப் பகிர்ந்தளிப்பதைக் கொள்கை இலக்காக திமுக கொண்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் பயணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, இலவச பேருந்து பயணத் திட்டமான தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதம் ரூ 900 இல் இருந்து 1,200 வரை பெண்களால் சேமிக்க முடிந்துள்ளது. இந்திய அளவில் ஒரு பெண்ணின் மாத வருமானமானது 1. 2 லட்சம் என்ற அளவிலுள்ளது. இலவச பேருந்து பயணம் மூலம் மாதத்திற்கு 10-20% கூடுதலாகச் சேமிக்க முடிந்துள்ளது.

பெண்கள் நுழைவதற்கு வசதியாக, அரசியலைப் புரிந்து கொள்ளச் சான்றிதழ் படிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. பெண்களின் சுதந்திரத்திற்கு நடமாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தச் சேமிப்பு அவர்களின் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் கல்விக்காகச் செலவிடப்படுகிறது என்று தமிழ்நாடு திட்டக்குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேரும் பெண்களின் Gross Enrolment Ratio (GER) அதிகமாக இருப்பதால், அவர்கள் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும், அரசுப் பள்ளிகளில் சேரும் பெண்களின் GER மிகக் குறைவாக இருப்பதை மாற்றுவதற்காகவே, உயர் கல்வியில் சேரும் அரசுப் பள்ளியில் படித்த பெண்களுக்கு, 'புதுமைப் பெண்' திட்டம் மூலம் மாதம் ரூ 1,000 ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது.

கடந்த 70 ஆண்டுக்கால மாற்றங்களால் தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பீட்டளவில் இந்திய அளவில் மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+