இரண்டு இல்லையாம்.. மூன்றாம்.. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தால் அடிக்கும் லக்.. ஆட்டத்தை ஆரம்பித்த அரசு!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அந்த பேருந்து நிலையம் எப்படி இயக்கப்படும் என்ற முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
புலி வருது கதையாக இந்த பேருந்து நிலையம் திறப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை முழுமையாக திறக்க முடியவில்லை. எடப்பாடி ஆட்சி காலத்தில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது இந்த பேருந்து நிலையம் முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டது உறுதி செய்யபட்டது.

சென்னையில் இருந்து பயணிகள் எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆனது.
பிரச்சனை: முக்கியமாக பேருந்து நிலையம் உள்ளேயே தண்ணீர் தேங்கும் பிரச்சனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மழையில்தான் அங்கே தண்ணீர் தேங்கும் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபுவும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையத்தை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
முக்கிய செய்தி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அந்த பேருந்து நிலையம் தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பேருந்து நிலையத்தை மூன்று கட்டமாக திறக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு கட்டமாக திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இதை மூன்று கட்டமாக திறக்க முடிவு செய்துள்ளனர்.

முதலில் தென் மாவட்டங்கள், அதன்பின் மேற்கு மாவட்டங்கள், அதை தொடர்ந்து வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பேருந்து இயக்கத்தில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அது ஒவ்வொரு கட்டத்திலும் உடனடியாக களையப்படும்.
ரயில் நிலையம்: இன்னொரு பக்கம் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்கும் திட்டத்தில் தென்னக ரயில்வே (எஸ்ஆர்) உள்ளது. இதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது.
டிபாசிட் அடிப்படையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்திற்கு மண்டல பொது மேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார. இதன் கீழ் செலவை முழுமையாக தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 40 லட்சம் ரூபாய்க்கு முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு நிதி வழங்கி உள்ளது. சரியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே இந்த ரயில் நிறுத்தம் வரப்போகிறது. இங்கிருந்து விரைவில் மேல் பக்கம் நடந்து வரும் விதமாக நடைமேடை அமைக்கப்படும்.
இதனால் மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும். இன்னும் ஒரு வருடத்தில் இந்த ரயில் நிறுத்தம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணிகள் ஓவர்?: இன்னொரு பக்கம் 99 சதவிகித பணிகள் கிளாம்பாக்கத்தில் முடிந்துவிட்டன. அடுத்த 2 மாதங்களுக்குள் பேருந்து நிலையம் கண்டிப்பாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதற்கு முன் இந்த மாதமே சோதனை ஓட்டமாக 2-3 மாவட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 10 - 15 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு அடுத்த மாதம் முழுமையாக பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications