விடிகாலையில்.. வானதியை பார்த்ததுமே.. கையில் டீ கிளாஸுடன் வரும் "அன்பு"கள்.. அடடே கோவை தெற்கு
வானதி சீனிவாசன் தன்னுடைய தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார்
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் செயல்பாடுகள், அம்மக்களை ஈர்த்து வருகின்றன..!
சில தினங்களுக்கு முன்பு, கோவை, பொள்ளாச்சி என பல பகுதிகளுக்கும் சென்று கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முகாமை திறந்து வைத்து, கொரோனா நிவாரண உதவிகளையும் உதயநிதி தந்திருந்தார்..
கோவைக்கு சென்றவர், அப்படியே தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்ளும் நுழைந்தார். உதயநிதியை பார்த்ததுமே, அந்த தொகுதி மக்கள் பரபரப்பானார்கள்..

வானதி
கொரோனா நிவாரண உதவி பொருட்களை அங்கிருந்தோருக்கு வழங்கிவிட்டு, அப்படியே வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியிலும் என்ட்ரி தந்தார்.. தொகுதிகள் சுற்றி சுழன்று பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கும் அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் உதயநிதி.. இது சம்பந்தமான ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார்.

ஆய்வு பணி
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தன் தொகுதிக்குள் எந்நேரமும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.. காலையில் இருந்து மாலை வரை ஓய்வின்றி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்.. முதல்முறையாக எம்எல்ஏவாகி இருப்பதால், தெற்கு தொகுதி மக்கள் பூரிப்புடன் இருக்கிறார்கள்.. சட்டசபையிலும் வானதியின் செயல்பாடுகள். கவனத்தை ஈர்த்து வருகின்றன.

காப்பாத்துங்க
ஒன்றரை மாதத்துக்கு முன்பு, "கோவையை காப்பாத்துங்க" என்று டெல்லி வரை லெட்டர் எழுதி புகார் சொன்ன வானதி, தற்போது அப்படி ஒரு தொற்று பிரச்சனையை சமீப காலமாக எழுப்பவில்லை.. காரணம், தொற்று மெல்ல மெல்ல அங்கு குறைந்து வருவதால், அடுத்தக்கட்டமாக தொகுதி மக்களின் குறைகளை கேட்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

ட்வீட்
"வெரைட்டிஹால் ரோடு அருகில் மாட்டாஸ்பத்திரி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறியதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து சரி செய்ய கோரினோம்" என்று தன்னுடைய அன்றாட பணிகள் குறித்தும் ஆய்வுகள் குறித்தும் ட்வீட் போட்டு வருகிறார் வானதி.. அதுமட்டுமல்ல, மக்களின் குறைகளை கேட்க, விடிகாலையிலேயே களத்தில் இறங்கிவிடுகிறார்..

டீ கிளாஸ்
விடிகாலையில் வானதியை தொகுதிக்குள் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.. கையில் டீ கிளாசுடன் வந்துவிடுகிறார்கள்.. இதை பற்றி வானதியே இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்.. "தொகுதி மக்களின் குறைகளை கேட்க அதிகாலை சென்றாலும் பாசத்துடன் தேநீர் அளிக்கும் சகோதரிகள்.. என்னை அன்பின் கதகதப்பில் அரவணைத்துக் கொள்கிறார்கள்" என்று நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.. வானதியின் இந்த ட்வீட்களுக்கு பெரிதும் வரவேற்புகள் குவிந்து வருகின்றன..

வாழ்த்துக்கள்
"சரியான முன்னெடுப்பு அக்கா.. சிறப்பான பணிகள்.. வாழ்த்துக்கள்" என்று பாராட்டுகின்றனர் ட்விட்டர்வாசிகள்.. மேலும் சிலர், "இதுதான் தமிழர் குணம்... இப்படிப்பட்ட மண்ணில் இதை சாப்பிடாதே, இதை படிக்காதே, இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என்று தமிழரை பதைப்பதைக்க வைக்கிறீர்களே நீங்களும், உங்கள் தலைமையும்?" என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதில் ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல், "அக்கா... தன லாபம். வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு?" என்று பாசத்துடன் விசாரித்துள்ளார்.

சபாஷ்
எப்படி இருந்தாலும், மிக ஆர்வத்துடன் வானதி சீனிவாசன் செயல்பட்டு வருகிறார்.. மக்களின் குறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், கோவையில் தடுப்பூசி முகாம்களையும் தவறாமல் ஆய்வு செய்து வருகிறார்.. இதனால், எம்எல்ஏ வானதிக்கான மதிப்புகள் தொகுதிக்குள் கூடிக் கொண்டே வருகிறது..!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications