நள்ளிரவு 1 மணி வரை கொட்டப்போகும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு வந்த ‛ஜில்' அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் நள்ளிரவ 1 மணி 3 மணிநேரத்துக்கான வானிலை கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை எடுத்து கொண்டால் நாளை திருவண்ணமாலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்ம் ராணிப்பேட்ட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கல் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 9) ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications