Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை பெரிய திட்டம்! ஓபிஎஸ், டிடிவிக்கும் பாஜக கூட்டணியில் வாய்ப்பாமே! போட்டுடைத்த எக்ஸ்பர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை பெரிய திட்டம் வைத்துள்ளார். தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், தேமுதிக ஆகியோரையும் கொண்டு வர வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே பணிகளை தொடங்கி விட்டன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி எப்படி அமையும்?, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வியூகம் என்ன? மதுரையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 20ம் தேதி நடக்கும் மாநாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெளிவாக கூறியுள்ளார்.

In Tamil Nadu Annamalai wants to alliance with O Panneer Selvam and TTV Dhinakaran, says Raveendran Duraisamy

இதுதொடர்பாக ரவீந்திரன் துரைசாமி ‛ஒன்இந்தியா' யூ டியூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் விபரம் வருமாறு:

கேள்வி: ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மாநாடு நடத்தும் அதேவளையில் சென்னையில் ஓ பன்னீர் செல்வம் கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி மாநாடு நடத்தும் தேதியில் ஓ பன்னீர் செல்வம் நடத்துவதன் தேவை ஏன் உள்ளது?

ரவீந்திரன் துரைசாமி: தவறு இல்லையே. 62 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார். அதிமுக அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவர் என்றால் ஓ பன்னீர் செல்வமும் தான் ஒரு தலைவர் என்ற முறையில் அரசியல் செய்கிறார். உள்ளாட்சி தேர்தலில் 25 சதவீத ஒட்டு எடுத்த அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு என்பது கருணாநிதி, எம்ஜிஆர் பிளவை போன்று முக்கியத்துவம் பெறாது. ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஒன்றாக இருந்தே திமுகவை தோற்கடிக்க முடியவில்லை. தற்போது பிரிந்ததால் தோற்கடிக்க முடியாது என மக்கள் பா்ப்பார்கள்.

இதனால் மோடியை பிரதமர் வேட்பாளராக வைத்து கொண்டு பன்னீர் செல்வத்தை வீழ்த்த எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். பண்னீர் செல்வமும் பாஜகவுடன் டிராவல் செய்யவே நினைக்கிறார். அதேவேளையில் எனக்கும் சக்தி உள்ளது என்று காட்ட திருச்சியில் ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்தினார். எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்தும் போது சென்னையில் கூட்டம் நடத்துகிறார். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, பாஜகவுக்கு ஓ பன்னீர் செல்வம் மெசேஜ் அனுப்புகிறார்.

In Tamil Nadu Annamalai wants to alliance with O Panneer Selvam and TTV Dhinakaran, says Raveendran Duraisamy

2019 மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் சேர்ந்து ஒரு தொகுதியில் தான் ஜெயிக்க முடிந்தது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் அண்ணாமலை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். இதற்காக பரந்து விரிந்த பெரிய தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து அதிக இடங்களை வெல்ல நினைக்கிறார். இதனால் பன்னீர் செல்வத்தை இணைத்து டீசன்டான, கண்ணியமான சீட் வழங்கலாம். அதற்குள் எடப்பாடி பழனிச்சாமி சண்டையிட்டால் அவர் பிரதமர் வேட்பாளர் இல்லாமல் போகலாம்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணியை விரும்புகிறார். இதனால் தான் அவர் முஸ்லிம் சிறை கைதிகள் விடுதலை, இந்தி விஷயம், நெய்வேலி பிரச்சனையில் அடக்கி வாசிக்கிறார். பாஜகவுடன் மோத வேண்டாம். பிரதமர் வேட்பாளர் தான் முக்கியம் என்ற புள்ளியில் அவர் உள்ளார். ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தல் என்பது வேறுவிதமானது.

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை ஆளும் கட்சி எப்படி கையாளுகிறதோ?அப்படித்தான் மக்களவை தேர்தலும் கையாளப்படும். இதனை ஜெயயலலிதா, கருணாநிதி செயல்படுத்தினர். அதனை ஸ்டாலினும் செயல்படுத்தலாம். இதனால் பெரிய அளவில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார்.

கமல்ஹாசன், விஜயகாந்த், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் கூட்டணிக்கு வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். இதனால் தான் தேமுதிகவை நடைப்பயண விழாவுக்கு அழைத்தார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆளும்கட்சி எதிர்ப்பு என்பது மக்களவை தேர்தலில் எதிரொலிப்பது இல்லை. அது சட்டசபை தேர்தலில் தான் எதிரொலிக்கும்.

இன்னும் சொல்லப்போனால் ஆட்சியில் இருக்கும் அதிகார பலம் தான் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பிரதிபலிக்கிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் 2009 மக்களவை தேர்தலில் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவியாக இருந்தார். அப்போது சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு 3 சீட் கொடுத்தார். ஆளும்கட்சியாக மாறியபிறகு 2014ல் 2 கட்சிகளுக்கு ஒரு சீட் கொடுத்து கூட்டணியை உடைத்தார்'' என்றார்.

In Tamil Nadu Annamalai wants to alliance with O Panneer Selvam and TTV Dhinakaran, says Raveendran Duraisamy

கேள்வி: பெரிய என்டிஏ கூட்டணி என பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியை விட்டால் பெரிய கட்சியே அங்கு இல்லையே?

ரவீந்திரன் துரைசாமி: தமிழகத்தை பொறுத்தவரை 2019 தேர்தலைபோல் அப்போது இருந்த கட்சிகள் இந்த முறையும் என்டிஏ கூட்டணிக்கு வேண்டும். கடந்த முறை பன்னீர் செல்வம் மட்டும் தான் ஒரு சீட் ஜெயித்தார். இதனால் அவர், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் வேண்டும். டிடிவி தினகரனை பொறுத்தமட்டில் அவர் பிரதமர் வேட்பாளர் அணியில் இருக்க விரும்புகிறார். சீமான் துணிச்சலாக தனித்து நிற்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படி கூறவில்லை. என்டிஏ கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி போய் தனித்து போட்டி என்றால் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையை சந்திக்கலாம். இருப்பினும் என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தான் பெரியவர். ஆனாலும் ஸ்டாலினுக்கு மிகவும் தூரத்தில் தான் உள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் சமபலம் வாய்ந்த தலைவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைய தேதியில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் .இருப்பினும் அவரை மட்டும் வைத்து கொண்டால் போதும் என்பது இல்லை. இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் டெல்லி வியூக அணியின் பார்வை தான் அப்படித்தான் உள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+