தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2583 பேர் ஒரே நாளில் மீண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது.

தமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை
25,46,689 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2,583 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,88,775 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,889ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 24 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 24816ல் இருந்து 24025 ஆக சரிந்தது

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 175 பேரும். ஈரோட்டில் 132 பேரும், சென்னையில் 127 பேரும், சேலத்தில் 107 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2222 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், தஞ்சாவூரில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+