இளைஞர்கள், இணை நோய் இல்லாதவர்கள்.. கொரோனா 2ஆம் அலையில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. காரணம் என்ன
சென்னை: கொரோனாவால் இணை நோய்கள் உள்ளவர்களும் முதியவர்களும் மட்டுமே உயிரிழப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 40 வயதுக்குக் குறைவானவர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா 2ஆம் அலை
இருப்பினும், பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தாக தெரியவில்லை. பல இளைஞர்கள் மாஸ்க் கூட அணியாமல் வெளியே சுற்றுவதைப் பார்க்க முடிகிறது. இணை நோய் உள்ளவர்களும் முதியவர்களும் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்ற முன்பு பரவிய தகவலை, இளைஞர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கொரோனா 2ஆம் அலையில் நிலைமை முற்றிலுமாக வேறாக உள்ளது.

இணை நோய் இல்லாதவர்கள்
தமிழகத்தில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வரை 12,222 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். அவர்களில் 2084 (18%) பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். மே 9ஆம் தேதி மாநிலத்தில் கொரோனா உயிரிழப்புள் 15,648ஆக இருந்தது. ஆனால், அப்போது இணை நோய் இல்லாதவர்களின் உயிரிழப்பு 6063 (39%) ஆக உயர்ந்திருந்தது. குறிப்பாக, நேற்று கொரோனாவால் உயிரிழந்த 298 பேரில் 78 பேர் எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள்.

ஐசியுகளில் அதிக இளைஞர்கள்
இது குறித்து கீழ்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தமணி கூறுகையில், "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இப்போதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் சுகர், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களே அதிகம் உயிரிழக்கின்றனர். ஆனால் கடந்த ஆறு வாரங்களாக ஐ.சி.யுகளில் அதிகமான இளைஞர்களையும் இணை நோய் இல்லாதவர்களையும் அதிகம் பார்க்க முடிகிறது. அவர்களில் சிலர் உயிரிழந்தும் விடுகின்றனர்.

இளைஞர்கள் உயிரிழப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 298 பேரில் ஐந்து பேர் 20-30 வயதுடையவர்கள், எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள். மேலும். 40-50 வயதுடையவர்களில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 21 பேர் எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள். அதேபோல 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மத்தியிலான வைரஸ் பாதிப்பும் மாநிலத்தில் உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் 959 சிறார்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்பு
மேலும், ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் 31-40 வயதுடையவர்களின் உயிரிழப்பு என்பது 37% அதிகரித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி தரவுகளின்படி 31-40 வயதுடைவர்கில் 453 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். இந்த எண்ணிக்கை மே 9ஆம் தேதி 623 ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் 20-30 வயதுடையவர்களின் மரணம் 31% (ஜனவரி 142, மே 187) வரை அதிகரித்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் அதில் எட்டு பேர் 20-30 வயதுடையவர்கள், மேலும் 35 பேர் 30-40 வயதுடையவர்கள் ஆகும்.

காரணம் என்ன
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாகவே ஐசியுகளில் அதிகளவில் இளைஞர்களையும், இணை நோய் இல்லாதவர்களையும் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. தவறான பழக்கங்களைக் கொண்ட இளைஞர்களுக்குத் தான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறதா அல்லது அனைவருக்கும் ஏற்படுகிறதா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications