383-ம் ஆண்டில் சென்னை.. முக்கிய பூங்காக்களில் ‘செல்ஃபி பூத்கள்’.. எலியட்ஸ் கடற்கரையில் கொண்டாட்டம்
சென்னை: நாளை மெட்ராஸ் டே கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அதனை கொண்டாடுவதற்காக மாநகராட்சி சார்பில் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சிங்கார சென்னைக்கு நாளையுடன் வயது 383 ஆகப் போகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணம் முதன் முதலில் உருவானது.
இந்தியாவுக்கு வாணிபம் செய்வதற்காக வந்த பிரிட்டிஷ்காரர்கள் வந்தவாசியை ஆட்சி செய்து வந்த தாமஸ், வெங்கடப்ப நாயக்கரிடம் மதரசப்பட்டினம் என்ற பகுதியை வாங்கினார்.

சென்னை வரலாறு
கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் 1969- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாதுரையால் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட்டது.

நாளை சென்னை தினம்
பின்னர் கலைஞர் கருணாநிதியால் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. எனினும் அதற்கான கொண்டாட்டங்கள் முன்னரே தொடங்கி உள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகள்
குறிப்பாக சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. எலியட்ஸ் கடற்கரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதேபோல் சென்னை தினத்தை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள் என பலதரப்பினருக்கு ஓவியப்போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை நடத்தவும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகளை அமைக்கவும் ஏற்பாடு சென்னை மாநகராட்சி சார்பில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்பி எடுக்கும் வகையில், நகரின் முக்கிய பூங்காக்களில் ‘செல்ஃபி பூத்கள்' அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணிகளும் நடைபெற உள்ளன.












Click it and Unblock the Notifications