73.5% வன்னியர் வாக்கு; குஷியில் தர்மபுரி! அன்புமணிக்கு சிபிஐ ‘குறி’? அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

மதில் மீது பூனையாக இருக்கிறது பாமக. அந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. திமுகவுடன் விசிக கடந்த மக்களைவைத் தேர்தல் மட்டும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவுடன் தான் பயணித்து வருகிறது.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முறிந்து விட்டது என்ற நிலைப்பாட்டை இதுவரை திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிகளும் எடுக்கவில்லை. ஆகவே, அது தேர்தல் கூட்டணியாக மட்டும் இல்லாமல் கொள்கைக் கூட்டணியாக முன்மாதிரியாக இருந்து வருகிறது.

ஆனால், இதில் பாமக எப்படியோ அப்படித்தான் தேமுதிக. தேர்தல் சமயத்தில் இவை எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேரம் நடத்துகின்றன. பாஜக கூட்டணியிலிருந்துவந்த தேமுதிக 14 சீட்டு ஒரு ராஜ் சபா சீட்டு யார் தருகிறார்களோ அந்தக் கட்சியுடன் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அரசியல் நிலைப்பாடு அடிப்படையில் கூட்டணி என்று இல்லாமல் எந்தப் பக்கம் எடை அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கம்தான் எங்களுடையது என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

அவரது அறிவிப்பு அரசியல் விமர்சகர்கள் பலரையும் சங்கடப்பட வைத்துள்ளது. சிலர் இதில் ஒன்று ஆச்சரியம் இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வீட்டிற்குச் சென்று தேமுதிக குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

அதை வெளிப்படையாக ஊடகம் முன்பாக போட்டு உடைத்தார் துரைமுருகன். அப்போது அது தேமுதிகவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய பாமகவின் நிலைப்பாடு இதே அளவில்தான் உள்ளது. கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் பாமக ஆளும் கட்சியாக வரவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

ஆனால், திமுக எந்தளவுக்குக் கொள்கை ரீதியாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டு அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. திமுகவிலிருந்து பிரிந்து போன அதிமுகவும் அப்படித்தான். இந்த இருகட்சிகளின் தலைமையில்தான் கூட்டணிகள் அமைகின்றன.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

ஆனால், பாமக தலைமையில் எந்தக் கூட்டணியும் அமைவதில்லை. பல கட்சிகளுடன் ஒரு கட்சியாகத்தான் பாமக இதுவரை கூட்டணி குதிரையில் சவாரி செய்தது.

அதை மீறி 'மாற்றம் முன்னேற்றம்' என்று அன்புமணி ராமதாஸ் களம் இறங்கிய காலத்திலும் அந்தக் கட்சி தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை.

அதற்குக் காரணம், பெரும்பான்மை சாதியினருக்காக இயங்கி வரும் பாமக, பிற சாதியினர் ஓட்டுகளைப் பெறுவதற்காக ஒரு பொதுவான கொள்கையை முன்வைத்து அரசியலை வென்று எடுக்கவில்லை. இது ஒரு முக்கியமான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதை யாவும் கருத்தில் கொள்ளாமல் அன்புமணி ராமதாஸ் வெறும் ஆண்டுகளை மட்டும் கணக்குப் போட்டுப் பேசி இருந்தார்.

ஊடகங்கள் அதிமுக பக்கம் பாமக, கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகப் பேசத் தொடங்கிவிட்டன. அதற்கு ஏன் அவசரமா தவறான தகவல்களை ஊடகங்கள் சொல்கிறன. பாமக கூட்டணி குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சி வி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துப் பேசியது சொந்த விசயமாகத்தான் என்றும் விளக்கம் அளித்துள்ளார் அன்புமணி.

தேமுதிகவே 14 + 1 சீட்டுகளைக் கேட்கும் போது பாமக ஏன் அதைவிடக் குறைவாகக் கேட்க வேண்டும் என்ற விவாதமும் பாமக வட்டாரத்தில் தலையெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் உறுதி என்றும் சொல்கிறார்கள். அதைப்போல் ராஜ் சபா சீட் ஒன்றும் உறுதி எனச் செய்திகள் வலம் வருகின்றன.

இந்த முறை அன்புமணி ராமதாஸ் வழக்கம் போல் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இவரது கணக்கு பாஜக கூட்டணி பக்கம் இருக்க வேண்டும் என்பதாக உள்ளது என்கிறார்கள்.

ஆனால், கட்சிக்குள் அதிமுக பக்கம் இருப்பதுதான் நல்லது. ஒன்று, இரண்டு இடங்களிலாவது வெற்றி பெறலாம் என்றும் கட்சியினர் தலைமையுடன் வாதிட்டு வருகிறார்களாம்.

பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கூட்டணி இறுதி நேரத்தில்கூட உறுதி செய்யப்படலாம் என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.

இதனால் அதிமுகவைக் கடைசி நொடியில் பாஜக கூட்டணிக்குப் பணியவைத்துவிடும் என்றும் அரசியல் விற்பனர்கள் சொல்கிறார்கள். ஆனால், அமித்ஷா கூட்டணி கதவு திறந்துள்ளது என்று கூறியதற்கு, எடப்பாடி பழனிசாமி அதைத் தான் படிக்கவே இல்லை என்று மறுத்திருக்கிறார்.

பாஜக எப்படியும் பாமகவை தன் பக்கம் கொண்டுவந்துவிடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். காரணம், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தூக்கிக் கொண்டுள்ள வழக்கை பாஜக எப்போது வேண்டு மானாலும் தட்டி எழுப்பிவிடலாம் என்கிறார்கள்.

வழக்குகளைக் காட்டி அடிபணிய வைப்பதில் அமித்ஷா வல்லவர். நிச்சயம் பாஜகவின் கூட்டணியில்தான் பாமக இருந்தே ஆகவேண்டும் என்கிறார்கள்.

இப்படிக் கூட்டணிக் குழப்பம் பாமகவில் நிலவுவது தொடர்பான கேள்விக்குச் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், 'அந்தக் கட்சியை யாராலும் கணிக்கவே முடியாது' என்ற தொனியில் பதிலளித்திருக்கிறார்.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

பாமகவின் கூட்டணி உறுதியாகவில்லை என்றாலும் தர்மபுரி தொகுதி அன்புமணி ராமதாசுக்கு என்பது மட்டும் உறுதி. சரி அந்தத் தொகுதியின் நிலவரம் எப்படி உள்ளது?

அது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. தர்மபுரி வன்னியர்களின் மிகப்பெரிய வங்கியைக் கொண்ட தொகுதி. இதுவரை வன்னியர்களின் வாக்குகளை ஒவ்வொரு கட்சியும் எந்தளவுக்குப் பெற்றுள்ளன?

திமுக 8% பெற்றுள்ளது. அதைவிடக் குறைவாக அதிமுக 7.5% பெற்றுள்ளது. பாஜக 3.5% , நாம் தமிழர் கட்சி அரை சதம் வன்னியர் வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. ஆனால் தேமுதிக 5% பெற்றுள்ளது. காங்கிரஸ் 2% தான். ஆனால் பாமக 73.5% வன்னியர்களின் வாக்குகளை இந்தத் தொகுதியை பொறுத்தளவில் பெறும் கட்சியாக இருந்து வருகிறது.

In the BJP alliance PMK! CBI check for Anbumani

இந்தத் தர்மபுரி தொகுதியில் உள்ள பட்டியல் சமூகத்தின் வாக்குகளை யார் பெறுகிறார்கள்? கை புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? வன்னியர் வாக்குகளை பாமக அதிகமாகப் பெறுகிறது என்றால், அதற்கு நேர் திசையில் உள்ள விசிக தானே பட்டியலின மக்கள் வாக்குகளை அதிகம் பெற முடியும். அதானே லாஜிக். விசிக 54% பட்டியலின மக்கள் வாக்குகளை இந்தத் தொகுதியில் பெறுகிறது.

இது போக திமுக 13%, அதிமுக 4%., காங்கிரஸ் 0, பாஜக 1%, தேமுதிக 1% வாக்குகளைப் பெறுகின்றன. ஆனால், இதில் நாம் தமிழர் கட்சி 27% பட்டியலின வாக்குகளைப் பெறுகிறது என்பது வியப்பான விசயம்.

இந்த கருத்துக்கணிப்பு 17 கிராமங்கள், 4 பேரூராட்சி, 3 நகராட்சிகளில் எடுக்கப்பட்டதிலிருந்து தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+