கல்லூரி மாணவர்கள் கையில் கஞ்சா..’கிசா’ போதையில் மிதந்த மாணவி! வாங்கிக் கொடுத்ததே காதலன் தானாம்..!?
சென்னை: சென்னை பொத்தேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் நடத்திய 'மெகா' சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி ஒருவர் கஞ்சாவுடன் சிக்கியிருப்பதும், அவருக்கு கல்லூரி சீனியரான காதலனே கஞ்சா வாங்கிக் கொடுத்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை செல்லும் வழியில் பொத்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல பல்கலைக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பொறியியல், மருத்துவம், உள்ளிட்ட பல பாடப் பிரிவுகளில் இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் நிலையில், சிலர் கல்லூரி விடுதியிலும், சிலர் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தும் படித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் பொத்தேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காவனூர், கோனாத்தி, காட்டாங்கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்கலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருக்கும் நிலையில் அங்கு கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிவதாகவும், இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக புகார்கள் இருந்தது.
மேலும் கஞ்சா போதையில் இளைஞர்கள் அவர்களுக்கு உள்ளேயே சண்டை போட்டுக் கொள்வதாகவும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக சில கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாக தாம்பரம் மாநகர போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து அங்கு காலை ஆறு மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் நுழைந்து கல்லூரி மாணவர்களின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது. இதை அடுத்து அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், கஞ்சா புதைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கஞ்சா பயன்படுத்திய ஒரு மாணவி உள்ளிட்ட 19 மாணவர்கள் என மொத்தம் 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இதேபோல கஞ்சா பயன்பாடு இருப்பதாகவும் காவல்துறையினர் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை தாம்பரம் மாநகர போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அதில் கஞ்சா விற்ற மகேஷ் குமார், சுனில் குமார், பப்லு ஆகிய மூன்று பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் கைதான ஒரு மாணவி உள்ளிட்ட 11 பேரை சொந்த ஜாமினில் விடுவித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவர்களிடம் கஞ்சா சப்ளை செய்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பப்லு அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து கொண்டு கஞ்சா சாக்லேட் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் மகேஷ் குமாரும் சுனில் குமாரும் பெங்களூரில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி தாபாவில் வேலை செய்யும் பப்புலுவிடம் கொடுத்ததும், பப்லு அதை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் கஞ்சா வழக்கில் கைதாகி பின்னர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தனது கல்லூரி தோழிகளுடன் வசித்து வந்திருக்கிறார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த மாணவியும், அதே கல்லூரியில் மாணவியின் சீனியராக படிக்கும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவிக்கு காதலனே கஞ்சா புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும், தொடர்ந்து அவருக்கு கஞ்சா வாங்கி கொடுத்து வந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications