இது டீசர்தான்.. கிளைமேக்சில் எடப்பாடிக்குத்தான் பெரிய சிக்கல்.. அடித்து பேசிய "புள்ளி".. அப்போ ஓவரா?
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு ஆதரவாக முழுமையாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார்.
சென்னை: சிவசேனா சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவே அதிமுக விவகாரத்திலும் எதிரொலிக்கும் என்று பல்வேறு அரசியல் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேட்டி அளித்துள்ளார்,.
சிவசேனாவில் எம்எல்ஏக்கள் பலர் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக திரும்பியதால், கட்சிக்குள் உத்தவ் தாக்கரே அணி - ஏக்நாத் ஷிண்டே அணி என்ற இரண்டு அணிகள் உருவாகின. இதில் ஷிண்டே அணி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இதனால் தாக்கரே அணியின் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முறிந்தது.
இந்த நிலையில்தான் சிவசேனா சின்னமான வில் அம்பு சின்னத்தையும், கட்சி உரிமையையும் கேட்டு ஷிண்டே தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த மனுவில்தான் தேர்தல் ஆணையம் ஷிண்டேவிற்கு சின்னத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அதிமுக வழக்கிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டி
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில். சிவசேனா வழக்கில் நடந்ததுதான் இங்கும் நடக்கும் என்று கூற முடியாது. அங்கே சிவசேனா சட்டத்தின்படி முடிவு எடுக்கப்பட்டது. இங்கே அதிமுக சட்டத்தின்படி முடிவு எடுக்கப்படும். 2026 வரை தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோருக்குத்தான் சின்னம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இரண்டு பேருக்கும் 50 - 50 என்றுதான் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. நீதிமன்றத்தை மீறி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திடம் அதற்கான அதிகாரம் உள்ளது. எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஈரோடு கிழக்கு
இப்போது ஈரோடு கிழக்கில் வந்த தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவாக வந்து உள்ளது. ஆனால் இது இறுதி தீர்ப்பு கிடையாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வேறு மாதிரி வரவே வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை பாருங்கள். அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படும். அதோடு மோடியை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக ஆதரிக்கிறார்.

தீர்ப்பு
அதனால் தனக்கு ஆதரவாக முழுமையாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவாக தீர்ப்பு வராது. தீர்ப்பு பெரும்பாலும் இரண்டு பேருக்கும் சாதகமாக, இரண்டு பேருக்கும் 50 - 50 என்றுதான் வர வாய்ப்பு உள்ளது. பாஜகவோடு கூட்டணி வைக்க எடப்பாடி தயாராக இல்லை. இதனால் பாஜக எடப்பாடிக்கு ஆதரவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது.

எடப்பாடி
எடப்பாடிக்கு தனியாக சீட் வாங்கும் பலம் இல்லை. அவருக்கு 15 சதவிகிதம் வாக்குகள்தான் இருக்கிறது. அவரை பெரிய தலைவராக ப்ரோமோட் செய்ய வேண்டாம். அவர் மட்டும் இருந்தால் ஒரு ஜாதி ஆட்சி, ஒரு ஜாதி கட்சி போல அதிமுக ஆகிவிடும். அவர் மட்டும் இருந்தால் சீட் வராது. ஒற்றை தலைமையை போனால் எடப்பாடிக்கு எதிராக பல ஜாதிகள் திரும்பும். அதனால் பாஜக அவரை மட்டும் ஆதரிக்க வாய்ப்புகள் இல்லை. எடப்படி தனியாக நின்றால் அவருக்கு 15 சதவிகிதம் வாக்குகள் கூட வாய்ப்பு உள்ளது.

மோடி
மோடியை ஓ பன்னீர்செல்வம் நம்புகிறார். மோடி நம்மை காப்பாற்றுவார் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். எடப்பாடியை தனிப்பட்ட தலைவராக பாஜக பார்க்கவில்லை. அவரை தனிப்பட்ட வகையில் அதிமுகவை வழிநடத்தும் தலைவராக பாஜக பார்க்கவில்லை. அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு நட்பாக இருக்கிறார். அண்ணாமலையை கூட ஓபிஎஸ் நம்பவில்லை. அவர் மோடியைத்தான் நம்புகிறார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications