அம்பி டூ அந்நியன்.. விக்ரம் நடித்த காட்சியையே தூக்கி சாப்பிட்ட சீமான்.. பல்டி பேச்சுக்களின் தொகுப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில ஆண்டுகளில் பெரியாரை போற்றி வந்த நிலையில், தற்போது முழுமையாக எதிர்த்து விமர்சிக்கும் வீடியோ மக்களிடையே விவாதமாகியுள்ளது. அன்று எந்த விஷயத்தை வைத்து பெரியாரை புகழ்ந்தாரோ, அதே விவகாரத்தை வைத்து இன்று எப்படி விமர்சித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் கூறியதாக சீமான் பேசி இருக்கிறார். ஆனால் பெரியார் அப்படி எங்கேயும் பேசவில்லை என்று திமுக, தபெதிக உள்ளிட்ட பலரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறு சீமானிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் பெரியார் குறித்த சீமானின் கருத்து தொடர்பாக தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகளும், தற்போது பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகளும் பேசுபொருளாகியுள்ளது.
அப்போது: மண்ணுக்குள் விழ வேண்டிய வயதில், இந்த மண்ணுக்காக விழுந்த தலைவன்டா தந்தை பெரியார்..
இப்போது: பெரியார் இல்லையென்றால், ஒன்றும் இல்லை.. என்ன நீங்க பண்ணீட்டீங்க.. இந்தப் பக்கம் பெரியார் பெரும் சொத்திற்கு அதிபதி.. அந்த சொத்திற்கு ஒரு வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை செய்து கொண்டு போய்ட்டார்..
அப்போது: மூத்திரச்சட்டியை தூக்கி கொண்டு தெருத் தெருவாக போய் எங்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டத்தை துடைக்க போராடிய மாபெரும் தலைவன்டா தந்தை பெரியார்..
இப்போது: அன்றைக்கு தெளிவில்லை.. அன்றைக்கு படிக்கவில்லை.. இன்று தெளிவு வந்துவிட்டது.. அதனால் எதிர்க்கிறேன்..
அப்போது: இந்த பேச்சிற்கெல்லாமா பெரியார் பலியாகிருவாரு.. களங்கப்பட்டு போவாரு..
இப்போது: கொள்கையே பெரியாரை எதிர்க்கிறது தான்.. திராவிட சித்தாந்தத்தின் வேர் எது.. பெரியார்.. அதனை வெட்டி சாய்ப்பதே.. சொத்தை பாதுகாக்க வாரிசு தேடியவர் நீங்கள்.. அங்கு மனித விடுதலைக்கு சொத்தை விற்று போராடுகிற போராளிகள்.. நீங்கள் வாரிசு தேடிய முதலாளி..
இப்படி நாம் தமிழர் கட்சி தொடங்கிய சில ஆண்டுகள் பெரியாரை போற்றி புகழ்ந்து வந்த சீமான், தற்போது முழுமையாக எதிர்த்து வருகிறார். அதேபோல் பெரியார் குறித்து சீமான் புகழ்ந்து பேசும் வீடியோக்கள் மீண்டும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications