நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குப் பதிவு.. கரூர் தான் டாப்.. சென்னையில் மிகக் குறைவு..!
சென்னை : தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகளும், சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது.
இன்று பதிவான வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய வாக்குப் பதிவில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் சில சர்ச்சைகளுடன் முடிவடைந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ஒரு சில இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க 6 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 5 மணிக்கு வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

சென்னையில் வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்காளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக 100 வயதை கடந்த முதியவர்கள் அதிக அளவில் மாநிலம் முழுவதும் வாக்களிப்பதை காணமுடிந்தது இதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் முதல் வாக்கினை பதிவு செய்தனர். சில இடங்களில் பணப்பட்டுவாடா, முறைகேடு புகார்கள் எழுந்தாலும் மற்றபடி பெரிய அளவிலான புகார் இல்லை என்றே சொல்லலாம்.

வாக்குப்பதிவு சதவீதம்
இந்நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகளும், சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டு தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

எங்கெங்கே எவ்வளவு?
மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகளும், நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் தலைநகரான சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 200 வார்டுகளைக் சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 30 லட்சத்து 49 ஆயிரம் ஆண் வாக்காளர்களும் 31 சுமார் 31 லட்சம் பெண் வேட்பாளர்கள், ஆயிரத்து 600 இதரர் என மொத்தம் 61 லட்சத்து 73 ஆயிரம் வாக்களர்கள் உள்ளனர். ஆனால் வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
Recommended Video

தருமபுரி முதலிடம்
மாவட்ட அளவில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநகராட்சிகளில் 52.22% வாக்குகளும், நகராட்சிகளில் 68.22% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதேபோல் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் 74.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications