துக்ளக் ரமேஷ் இல்ல திருமண விழா... ஓ.பி.எஸ் -குருமூர்த்தி சந்திப்பு தவிர்ப்பு
சென்னை: துக்ளக் இதழின் மூத்த செய்தியாசிரியர் ரமேஷ் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ஆடிட்டர் குருமூர்த்தியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துக்கொண்டனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சென்ற பின்னர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து சென்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஓ.பி.எஸ்.ஸை சசிகலாவுக்கு எதிராக திருப்பியது தொடர்பாக குருமூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

திருமண வரவேற்பு
துக்ளக் இதழை சோ நடத்தத் தொடங்கியது முதல் அந்த இதழில் செய்தியாசிரியராக இருப்பவர் ரமேஷ். கடந்த கால் நூற்றாண்டை ஒட்டி ஒரே பத்திரிகையில் அவர் இருப்பதால் துக்ளக் ரமேஷ் என பெயர் வந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் பரிச்சயமானவர் இவர்.இவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடந்தது.

அமைச்சர்கள் வாழ்த்து
துக்ளக் ரமேஷ் இல்ல விழாவுக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி விட்டு சட்டென்று அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். அவர்களுடன் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த போயஸ் கார்டன் பூங்குன்றனும் கலந்துகொண்டார்.

சந்திப்பு தவிர்ப்பு
திருமண வரவேற்பு நிகழ்வில் குருமூர்த்தியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துவிட்டனர். ஓ.பி.எஸ். அண்ட் கோ வந்து சென்ற பின்பே குருமூர்த்தி அந்த நிகழ்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது. குருமூர்த்தி வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் அந்த அரங்கை விட்டு வெளியேறிவிட்டனர்.

நத்தம் விஸ்வநாதன்
கடந்த 2011-2016 ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவில் பவர்ஃபுல் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.ஸோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார். இதனிடையே நேற்றைய தினம் பூங்குன்றனிடம் ஓ.பி.எஸ். சில விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications