பழுக்கவில்லை மாம்பழம்.. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமே 125 பேர்தான் வெற்றி!
சென்னை: நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகாராட்சி, பேரூராட்சி என மூன்று வகைகளிலும் மொத்தம் 125 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் 12,838 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் திமுக வரலாற்று வெற்றியை வெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பிற கட்சிகளும் கணிசமான இடங்களில் வென்றுள்ளன.

வெற்றி கனி இல்லை
இந்த நகர்புற தேர்தலில் சட்டசபை தேர்தல் கூட்டணி கட்சிகளை கழற்றிவிட்டு அதிமுக தனித்து களம் இறங்கி செல்வாக்கை நிரூபிக்க முயன்றது. இது அதிமுகவுக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. இதேபோல் கூட்டணியின்றி பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் குதித்தன. தங்களுக்கு செல்வாக்கு உள்ள வார்டுகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்து இந்த கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டன. இதில் எதிர்பார்த்த அளவுக்கு எந்த கட்சிகளும் வெற்றி கனி கிடைக்கவில்லை.

பாமகவுக்கு ஏமாற்றம்
இதற்கு பாமகவும் விதிவிலக்கல்ல. தனித்து களம் இறங்கிய பாமக கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. பேரூராட்சிகளில் உள்ள 7603 வார்டுகளில் 73, நகராட்சிகளில் உள்ள 3842 வார்டுகளில் 48, மாநகராட்சிகளில் உள்ள 1373 வார்டுகளில் 4 என மொத்தம்125 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சிகள் எவை
மாநகராட்சிகளை பொறுத்தமட்டில் காஞ்சிபுரத்தில் 2 வார்டுகள், கடலூர், கிருஷ்ணகிரி, வேலூரில் தலா ஒரு வார்டிலும் பாமக வென்றுள்ளது. நகராட்சிகளைப் பொறுத்தவரை இடங்கசாலையில் 8, ஜெயங்கொண்டம், தாரமங்கலம் 4, விருத்தாச்சலம், ஆற்காடு 3, சத்தியமங்கலம், திருவத்திபுரம், வந்தவாசி, சீர்காழி, மயிலாடுதுறை, சோளிங்கர், திண்டிவனம், விழுப்புரம், மேல்விஷாரம், 2, திருவள்ளூர், பெரியகுளம், சிதம்பரம், வாலாஜாபேட்டை, கோட்டகுப்பம், நெல்லிக்குப்பம், குழித்துறை, திருப்பத்தூர் நகராட்சிகளில் தலா ஒருவர் என மொத்தம் 48 பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பேரூராட்சி விபரம்
பேரூராட்சிகளை எடுத்து கொண்டால் மாவட்ட வாரியாக சேலத்தில் 15 வார்டு, தர்மபுரி 12, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா 6, செங்கல்பட்டு, வேலூரில் தலா 5, ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 4, கடலூரில் 3, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், மயிலாடுதுறையில் தலா 2, அரியலூர், விழுப்புரம், நாமக்கல்லில் தலா ஒரு வார்டுகள் என மொத்தம் 73 வார்டுகளில் பாமக வென்றுள்ளது.

கடந்த முறை எப்படி
கடந்த 2011 தேர்தலில் மாநகராட்சியில் 2, நகராட்சியில் 60, பேரூராட்சியில் 109 இடங்கள் என மொத்தம் 171 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெற்றி இடங்கள் குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மாநகராட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 அதிகரித்துள்ள. ஆனால் நகராட்சி, பேரூராட்சியில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் கடந்த முறை நிர்வகித்த 2 பேரூராட்சிகளிலும் பாமக கைகளில் இருந்து நழுவியுள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாமக கவனம் செலுத்தும் அவசியம் எனவும், பாமகவின் கோட்டையாக கருதப்படும் வடக்கு மாவட்டங்களில் இன்னும் அக்கட்சி நன்கு செயல்பேட வேண்டியது அவசியம் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Recommended Video

ராமதாஸ் கவலை
மேலும் தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை அடைந்துள்ளார். தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை மூலதனமாக வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தல் பணம் படைத்தவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகத் தான் கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை விடவும் ஜனநாயகத்திற்கு பண நாயகத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், ஆபத்தும் தான் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது'' என திமுக, அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications