"பிளான் சக்ஸஸ்".. துள்ளி வந்த "ஆட்டுக்குட்டி".. ஒரே கல்லில் 2 மாங்கா அடித்த பாஜக.. விழிக்கும் திமுக
திமுகவை டேமேஜ் செய்ய அடுத்த ஐடியாவை பாஜக கையிலெடுத்து வருகிறது
சென்னை: திமுகவுக்கு எதிரான காய் நகர்த்தல்களை பாஜக துவங்கிவிட்டது.. இதனால் திமுக தரப்பு எரிச்சல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாகவே, பாஜகவின் நடவடிக்கைகள் திமுகவுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டு வருகிறது.. திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து, அதை நடத்தியும் வருகிறது..
அறிக்கைகள், ட்வீட் பதிவுகள் மூலமும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தும் வருகிறது.. இவைகள் எல்லாம் சேர்ந்து திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.

திமுக
இதற்கெல்லாம் சரியான பதிலடிகளையும், தர்க்க ரீதியான வாதங்களையும், புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளையும், அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் அவ்வப்போது அளித்து வந்தபோதிலும்கூட, ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை விமர்சிக்கவே திமுகவின் அடிமட்டத்தில் சிலர் ஆர்வம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை
இதற்கு காரணம், அன்று ஐபிஎஸ் அதிகாரி பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலை, தன்னுடைய சொந்த கிராமத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார்... அதனாலேயே அவரை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.. ஆனால், தன் மீதான விமர்சனங்களையும் அண்ணாமலை தக்க பதிலடி தந்து முறியடித்து கொண்டிருக்கிறார்.. பதவியை துறந்துவிட்டு, ஆட்டுக்குட்டியை ஏந்திய ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் துணிச்சலை பாஜக மேலிடம் வியந்துதான் பார்த்தது..

ஆட்டுக்குட்டி
எனினும் ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை மீண்டும் சீண்ட திமுக யோசித்து வரும் நிலையில், அந்த யோசனையை முறியடிக்க பாஜகவே தயாராகிவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.. அதாவது, இனி அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், சால்வை, மாலைக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பரிசளிக்க போவதாக பாஜக தரப்பில் முடிவு செய்துள்ளனராம்.. இப்படி பரிசாக கிடைக்கும் ஆட்டுக் குட்டிகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க, அண்ணாமலையும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

போஸ்டர்கள்
இப்போது அதன் அடுத்தக்கட்டத்துக்கும் பாஜக சென்றுவிட்டது.. ஈஸ்டர் திருநாள் கொண்டாடும் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக போஸ்டரிலேயே அதற்கான பதிலடியை பாஜக தந்துள்ளது.. ஈஸ்டரை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.. அதில் ஆட்டுக்குட்டியும் இடம்பெற்றிருந்தது.. குறிப்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.கிளாரன்ஸ் சார்பில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஆட்டுக்குட்டி
"இது தான் உண்மையான மதச்சார்பின்மை" என்ற வாசகம் அதில் இடம்பெற்றிருந்தது.. ஆட்டுக்குட்டியும் துள்ளி வருவதுபோல் போட்டோ இடம்பெற்றிருந்தது.. இந்த போஸ்டர்கள் இப்படி பரபரக்கும் நேரம், அண்ணாமலை ஈஸ்டருக்கு வாழ்த்து சொல்லி அசத்தினார்.. அந்த வாழ்த்து கடிதமே, "தன் மந்தையில் இருக்கும் ஆடுகளை நேசித்து காப்பாற்றும் மேய்ப்பராக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளார். ஈஸ்டர் திருநாள் என்பது, நம் துக்கங்களில் இருந்தும், சோகங்களில் இருந்தும், இருண்ட காலங்களில் இருந்தும் இயேசு கிறிஸ்து வெளிச்சம் நோக்கி, மகிழ்ச்சியை நோக்கி அழைத்து செல்லும் அற்புத திருநாள்" என்று தெரிவித்திருந்தார்.

ஆட்டுக்குட்டி
பாஜகவின் இந்த அணுகுமுறை, 2 விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.. ஆட்டுக்குட்டி விஷயத்தை வைத்து, பாஜகவை டேமேஜ் செய்ய திமுக முயன்று வரும் நேரத்தில், பாஜகவே ஆட்டுக்குட்டியை போஸ்ட்டர் அடித்து ஒட்டி, திமுகவுக்கே ஜெர்க் தந்திருக்கிறார்கள்.. மற்றொருபுறம், கிறிஸ்தவ சமுதாய மக்களிடம் ஏற்கனவே இருந்த அதிருப்தியையும் களைய முயன்றதாகவும் தெரிகிறது.. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக பாஜகவை கருதி வருவதால், இப்படி ஒரு போஸ்டர் அடித்ததன் மூலம், ஒரே கல்லில் 2 மாங்காயை பாஜக பறித்துள்ளது..!












Click it and Unblock the Notifications