வணிகத்திலும் ஏற்றத்தாழ்வு? மற்றவர்களை விட தலித் வணிக உரிமையாளர்களின் வருவாய் குறைவு! ஆய்வில் ஷாக்
சென்னை: இந்தியா விரைவில் தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இருப்பினும் இன்னமும் சமூக நீதிக்கான போராட்டம் தேவைப்படுகிறது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். இந்த கூற்றை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வின் முடிவு தெரிய வந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை காட்டிலும், தலித் சமூத்தை சேர்ந்த வணிக உரிமையாளர்கள் 15-18% குறைவாகவே சம்பாதிக்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்தியா போன்ற நீண்ட பண்பாட்டு பாரம்பரியம் மிக்க நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வுகளின் வீரியம் அதிகமாக இருக்கிறது. இதற்கு எதிராக முற்போக்கு அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து களமாடி வருகின்றனர். ஆனால் மாற்றங்கள் அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை.

இன்னும் ஒரு சில நாட்களில் நாம் 78வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இருப்பினும், சமூக ஏற்றத்தாழ்வுகள் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒருபடி முன்னேறி தற்போது வணிகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள வணிக உரிமையாளர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று சமீபத்தில், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் உதவி பேராசிரியர் பிரதீக் ராஜ் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில் மற்ற சாதியை சேர்ந்த வணிகர்களை விட தலித் சமூகத்தை சேர்ந்த வணிக உரிமையாளர்கள் 15-18% குறைவாகவே சம்பாதிக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.
அதாவது வணிகத்தில் சமூக மூலதனம் என்கிற வகை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குள் ஒத்துழைத்து தகவல்கள், ரிஸ்க், அடுத்தக்கட்ட நடவடிக்கை போன்றவற்றை விவாதித்து முதலீடுகளை மேற்கொள்வார்கள். இப்படி செய்வது குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டுமல்லாது அந்த நபரை சார்ந்த சமூகத்தினருக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக முதலீடுகள் அதிக லாபத்தை ஏற்படுத்தும்.
இந்த சமூக மூலதனம் வணிக துறையில் உள்ள பிறபடுத்தப்பட்டோர் (OBC), பழங்குடியினர் (ST) மற்றும் இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் நல்ல பலனளித்துள்ளது. ஆனால் தலித் சமூத்தை (SC) சேர்ந்தவர்களுக்கு இது பலனளிக்கவில்லை. முன்னேறிய சமூகத்தினர் உட்பட மேற்குறிப்பிட்ட 3 சமூகத்தை சேர்ந்த வணிக உரிமையாளர்கள் சம்பாதிப்பதை விட, தலித் சமூகத்தை சேர்ந்த வணி உரிமையாளர்கள் 15-18% குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.
SC என்பது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பதில்லை. பல சாதிகளின் தொகுப்பை குறிப்பிடுகிறது. இப்படியாக இந்த சாதிகளுக்குள் இருக்கும் முரண்களை சமீபத்திய ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் சமூக மூலதனம் மட்டுமே வருமான குறைவுக்கு காரணமில்லை என்றும், இயல்பாகவே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் இந்த பாதிப்புகளுக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications