வருமான வரி கட்டியாச்சா? மாத சம்பளக்காரரையும் விடாதது "இதுக்குத்தான்".. உடனே பறிமுதல்.. அதிரடி பாருங்க
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில், சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. இந்த விழாவில், வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான சுனில் மாத்தூர் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில், சுதந்திர விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில், வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான (புலனாய்வு)சுனில் மாத்தூர் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

அதிகாரிகள் பங்கேற்பு: ஓய்வு பெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள், வருமான வரி மூத்த அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில், நேரடி வரிவிதிப்பு துறையில் சிறந்து விளங்கியதற்காக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையரின் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் சுனில் மாத்தூர் உரையாற்றும்போது, "அறிவியல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வியத்தகு முன்னேற்றங்களை நாம் அடைந்திருக்கிறோம்.. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவும், பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரியநாடாகவும் நம்முடைய நாடு கருதப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான உதவியை வழங்குவதில் வருமான வரித்துறையின் பங்கு மிக முக்கியமானது.. கிட்டத்தட்ட மொத்த வரிவசூலில் 54 சதவீதம், வருமான வரித் துறையின் பங்களிப்பாக உள்ளது..
இலக்கு நிர்ணயம்: வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்கு ரூ.33.60 லட்சம் கோடியாகவும், இதில் நேரடி வரி வசூல் ரூ.18.30 லட்சம் கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்புநடவடிக்கைகளையும் வருமான வரித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வரிஏய்ப்பு: வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வு பிரிவு 2022-23-ம் நிதி ஆண்டில் 81 சோதனைகளும், பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் ரூ.120 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் என மொத்தம் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டது என்றார்.
முன்னதாக, சென்னை கே.எம். இசை குழுமத்தின் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தங்களது இசையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.. அப்படியிருந்தும்கூட, வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.
வரி ஏய்ப்பு: அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவததாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானத்தை அதிகாரிகள் கண்டறியந்துள்ளது, பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications