வருமான வரி.. மாத சம்பளக்காரர்களே உஷார்.. விளைவு இதுதான்.. ஆன்லைனில் வரி செலுத்துவது எப்படி தெரியுமா?
சென்னை: வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வரும்நிலையில், வருமான வரியை கட்டாமல் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? ஆன்லைனில் வருமானவரியை எப்படி செலுத்த வேண்டும் தெரியுமா?
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

வருமான வரி: இதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. குறிப்பாக வரிக்கு உட்பட்ட வருமானம் விலக்குகள் மற்றும் விலக்குகள் மூலம் குறைக்கப்படும்போது பலர் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில்லை.
வரிஏய்ப்புகள்: வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தியும்கூட, வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது..
அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித்துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக செய்திகளும் வெளியாகியிருந்தன.
வழிமுறைகள்: இந்நிலையில், ஆன்லைனிலும் வருமானவரியை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணைய பக்கத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கலாம்.. ஒருவேளை அப்படி இருந்தால், டிஜிட்டல் கட்டண முறையான Phonepay மூலமாக எளிதில் வருமான வரி செலுத்தி கொள்ளலாம் என்பதற்காகவே, புதிய PhonePe ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் எப்படி வரிகளை செலுத்த வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான வழிமுறைகள்:
- இந்த புதிய ஆப் PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை 2 வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.
- இந்த புதிய ஆப் PhonePe பக்கத்திற்கு செல்ல வேண்டும்.. அங்கே "வருமான வரி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, நீங்கள் செலுத்த விரும்பும் வரி வகை என்ன? மதிப்பீட்டு வருடம் என்ன? பான் கார்டு விவரங்கள்? என்ன போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
- இப்போது, வரித்தொகையை பதிவிட்டு, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்திய பிறகு, அந்த தொகை 2 வேலை நாட்களுக்குள் வரி போர்ட்டலில் வரவு வைக்கப்படும்.
யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும் தெரியுமா? தனிநபர்கள் எல்லாருமே வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், தனிநபர் சங்கங்கள், நிறுவனங்கள், LLP உள்ளிட்டோர் வருமான வரி செலுத்த வேண்டும்..
3 வழிகள்: இந்த வருமான வரியானது, 3 வழிகளில் வசூலிக்கப்படுகிறது.. ஒன்று, குறிப்பிட்ட வங்கிகளில் வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்தலாம். இரண்டாவதாக, Taxes deducted at source [TDS] மூலமாக வரி வசூலிக்கப்படும்.. மூன்றாவதாக, Taxes collected at source [TCS] மூலமாக வசூலிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் வருமான வரி செலுத்தாவிட்டால் என்னாகும் தெரியுமா? உங்களுடைய Net worth value எவ்வளவு என்பதை, வங்கிகள் உங்களது வருமான வரி தாக்கல் செய்த படிவத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்வார்கள்.. நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல் போனால், நீங்கள் அவசரத்துக்கு வங்கிகளில் கடன் கேட்கும்போது, கிடைக்காமல் போய்விடும். அப்படியே கடன் கேட்டாலும், வருமான வரி தாக்கல் செய்துவிட்டு வருமாறு சொல்வார்கள்.
அறிவுறுத்தல்: அதேபோல, ஒரு குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது அதற்குரிய source உங்களால் காண்பிக்க முடியாமல் போய்விடும். நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்யும்போது, உங்கள் PAN number க்கு யாராவது TDS கட்டி இருந்தால் அதனை Refund வாங்க முடியாது. எனவேதான், வருமானவரியை முறையாக கட்ட சொல்லி அரசு அறிவுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications