Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாத சம்பளதாரர்களுக்கு பீதி.. அரசு ஊழியர்களுக்கு வருமான வரித்துறை அதிரடி.. கருவூலத்துறை மேஜர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருமானத்துறை தொடர்பாக கருவூலத்துறை தரப்பில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. என்ன அது?

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Income Tax Department IT Return and Time Extend for Government Employees by Treasury department

வரிஏய்ப்பு: ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்வதால், காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை மத்திய அரசு பரிசு வழங்குகிறது. மேலும், வரவு செலவு கணக்கை, "இ - வெரிபிகேஷன்" செய்யும், புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறதாம். இதையெல்லாம் கண்டுபிடிக்கவே, இந்த புதிய சாப்ட்வேர் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு முறை குறித்து மிகப்பெரிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலீடு: அதாவது, அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கீட்டு முறை அமலில் இருக்கிறது.. சேமிப்பு, முதலீட்டினை அடிப்படையாக வைத்து, வருமான வரி பிடித்தத்தில் கழிவுகள் பெற, பழைய கணக்கு முறையும், சேமிப்பு, முதலீட்டை காட்டி வரி பிடித்தத்தில் கழிவு பெறுவதற்கான வழி இல்லாமல், குறைந்த வரியுடன் புதிய கணக்கீட்டு முறையும் அமலில் உள்ளன.

இதில், எந்த முறையில் தங்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பதை, அரசு ஊழியர்கள், மார்ச் 18க்குள் தெரிவிக்க வேண்டும் என்று கருவூலத்துறை முதலில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கருவூலத்துறைக்கு முறையிட்டார்கள்.

உத்தரவு: இதையடுத்து, கருவூலங்கள் தரப்பிலிருந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கருவூலங்கள் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கே.விஜயேந்திர பாண்டியன் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில் உள்ளதாவது:

"2023 ஏப்ரல் முதல், 2024 மார்ச் வரையிலான காலத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பாக முடிவு செய்ய தேவையான ஆவணங்களையும், எந்த கணக்கு முறை என்பதையும், 2024 மார்ச், 18க்குள் அரசு ஊழியர்கள் அளிக்க வேண்டும். இதில் தற்போது, 2024 ஏப்ரல் 15 வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. கருவூலத்துறையின் இணையதளத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்ய, இதற்கான பகுதி கூடுதல் அவகாச காலத்தில் செயல்பாட்டில் இருக்கும்.

அவகாசம்:
இதை பயன்படுத்தி, உரிய அலுவலர்கள் வாயிலாக தேவையான விபரங்களை அளிக்க வேண்டும். பான் எண் அப்டேட் செய்யாதவர்கள், கணக்கீட்டு முறையை தேர்வு செய்யாதவர்கள், இதை பயன்படுத்தி கொள்ளலாம். வருமான வரி பிடித்தத்தில் கழிவு பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+