வருமான வரி ரிட்டர்ன்.. தாக்கல் செய்து.. Refundக்கு காத்திருந்தவர்களுக்கு.. எதிர்பார்க்காத ஷாக்!
சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த பலரும் refund கிடைக்காமல் குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆண்டு வருமான வரித் திரும்பப் பெறுதலில் 16% சரிவு ஏற்பட்டுள்ளது. வரி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள பணப்பரிமாற்றங்களுக்கு அதிகாரிகள் மேம்படுத்தப்பட்ட சோதனைகளை, ஆய்வுகளை மேற்கொள்வதே இதற்குக் காரணம்.
வரித் திரும்பப் பெறுதலில் ஏற்பட்ட இந்தச் சரிவு, நிகர நேரடி வரி வசூலை 6.3% உயர்த்தி, கிட்டத்தட்ட ₹11.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது அதிக ரீபண்ட் கேட்டு ரிட்டர்ன் கேட்டவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும் முன் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தனிநபர் வருமான வரி
ஏப்ரல் முதல் அக்டோபர் 12 வரையிலான காலகட்டத்தில், மொத்த நேரடி வரி வசூல் 2.4% அதிகரித்து ₹13.9 லட்சம் கோடியாக இருந்தது. தனிநபர் வருமான வரியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்ட போதிலும், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் refund பெறப்பட்ட வரித்தொகை ₹2.4 லட்சம் கோடியிலிருந்து ₹2 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பெருநிறுவனம் அல்லாதோரின் வரி refund பெறுதல் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹1.2 லட்சம் கோடியாக இருந்த இத்தொகை, தற்போது ₹62,359 கோடியாக சரிந்து, கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
வருமான வரி refund சரிவு
வரித் திரும்பப் பெறுதலில் ஏற்பட்ட இந்தச் சரிவுக்கு, வரி அதிகாரிகளால் கொண்டுவரப்பட்ட புதிய நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இதில், தானியங்கு சரிபார்ப்பு மற்றும் மத்திய செயலாக்க மையத்தில் (CPC) கூடுதல் சோதனைகள் போன்ற ஆய்வுகள் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சோதனைகள், தவறான refund கோரிக்கைகளைத் தடுப்பதோடு, துல்லியத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது பொய்யான ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களுக்கு விளக்கம் கேட்கப்படும். முறையான விளக்கம் கொடுக்கப்படாவிட்டால் அவர்களுக்கு refund கொடுக்கப்படாது. சில சமயங்களில் முறையாக சோதனை செய்து refund கொடுக்க கூடுதல் நேரம் ஆகலாம் என்று வரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தவறான திரும்பப் பெறுதல் கோரிக்கைகளைத் தடுக்க, மத்திய செயலாக்க மையத்தில் (CPC) தானியங்கு சரிபார்ப்பு மற்றும் கூடுதல் மதிப்பீட்டுச் சோதனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது துல்லியத்தை உறுதிப்படுத்த சில சமயங்களில் கூடுதல் நேரம் எடுக்கும்.
ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் refund கோரும் அனைத்து வருமான வரி அறிக்கைகளும் (ITRs) இந்த கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று வருமான வரித்துறை விளக்கி உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளுக்கான வரம்பு, வரி செலுத்துவோரின் வகையைப் பொறுத்து மாறுபடும்.
உண்மையான returnகளுக்கு மட்டும் பணம்?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் பலருக்கும் இப்போது வரி ரிட்டர்ன் refund கிடைக்கவில்லை என்ற புகார் நிலவி வந்தது. அதிக refund கேட்டு ரிட்டர்ன் செய்தவர்களுக்கு அந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. தற்போது இந்த அதிக வேல்யூ கொண்ட ரிட்டர்ன்களுக்கு refund வழங்கப்பட்டு வருகிறது. அனால் உண்மையான ரிட்டர்ன்களை முறைகேடு இன்றி பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த நிதி வழங்கப்படுகிறது.
50 ஆயிரத்திற்கு மேல் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு அந்த refund தொகை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடைசி தேதி நிறைவு அடைந்து பல நாட்கள் ஆன நிலையில் தற்போது refund தொகை வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications