2 நாட்களாக.. விடாமல் ஆட்டம் காட்டும் வருமான வரித்துறை.. ஷாக்கான சம்பளதாரர்கள்.. பறக்கும் நோட்டீஸ்
சென்னை: வருமான வரித் துறை பல்வேறு நபர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த வருடங்களில் தவறான கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு (ஐ.டி.ஆர்) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டு refund வரும் என்று எதிர்பார்த்துள்ளனர். செப்டம்பர் 15 அன்று ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிகிறது.

பொதுவாக வரி செலுத்துவோருக்கு ITR சமர்ப்பிப்புடன் பணி முடிவதில்லை. சமர்ப்பித்த பிறகு, அதை உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்பட்டவுடன், வரித்துறையால் அது பரிசீலிக்கப்படும். பரிசீலனை முடிந்ததும், 'பரிசீலனை நிறைவுற்றது' என்ற அறிவிப்பு வரி இணையதளத்தில் தெரியும்.
ஐ.டி.ஆர் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் அதை மின்முறையில் உறுதிப்படுத்தத் தவறினால், வருமான வரிக் கணக்கு செல்லாததாகிவிடும். அதாவது e-verification செய்ய வேண்டும். இல்லையென்றால் பணத்தைத் refund பெறுவதில் தாமதம் ஏற்படும். சில நேரங்களில், ஐ.டி.ஆர் உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், பரிசீலனைக்கு வழக்கத்தைவிட அதிக நேரம் ஆகலாம்.
வருமான வரித் துறை நடவடிக்கை: நோட்டீஸ் அனுப்பபட்டது
வருமான வரி கணக்குகளில் முறைகேடாக விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
சிலர், சிறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகள் கேட்டு உள்ளனர். இவை கண்டிப்பாக விசாரிக்கப்படும். அதேபோல் சுகாதார காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும் வீட்டுக்கடன் மீதான வட்டி, மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான விலக்குகளும் (பிரிவு 80E, 80EE, 80EEB) இந்த நடவடிக்கையின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இது குறித்து வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.
வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வருமான வரித் துறை சோதனை
வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை, வரி விதிப்புகளை முறையாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைச் சரியாகப் பராமரித்து, உரிய நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் வரி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். அதிக விலக்கு கோரிய MNC ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications