இன்றும் விடிந்ததும் விடியாததுமாக அமைந்தகரை கட்டுமான நிறுவனத்திற்கு சென்ற ஐடி அதிகாரிகள்! பரபரப்பு
சென்னை: சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் இன்றும் 3ஆவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2 ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடந்தது.

சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடு, அவர்களுடைய அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சென்னையில் அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் காஜா மேஜர் தெரு, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித் துறையினர் அணிகளாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசின் பொதுப் பணித் துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் கட்டுமான பணிக்கான கான்ட்ராக்டை சத்யமூர்த்தி பெற்றுள்ளார். அவருடைய நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்படுகிறது. அவரது நாமக்கல் வீடு, அங்குள்ள அலுவலகம் உள்ளிட்ட 20 க்கும் இடங்களில் வருமான வரித் துறை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
அது போல் ஈரோடில் காஞ்சிகோவில் பகுதியில் உள்ள சி.எம்.கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் குழந்தைசாமிக்கு தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. அது போல் கோவை காளப்பட்டியில் பாலசுப்பிரமணியம், சதாசிவம் ஆகியோரது கட்டுமான நிறுவனம், சூலூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராமநாதன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
நேற்றும் 2ஆவது நாளாக இந்த ரெய்டு தொடர்ந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை நடந்தது. சென்னை அண்ணா நகர் ஏவி பிளாக்கில் உள்ள வெங்கடாச்சலம் என்பவர் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இப்படி பரபரப்பான சூழலில் இன்றும் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்களில் 3ஆவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications