Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர் பிரபு வீடுகளில் ஐடி ரெய்டு..பரபரக்கும் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Recommended Video

    வருமான வரித்துறை ரெய்டு... யார் இந்த அன்புச்செழியன்?

    தமிழ் திரைப்படங்களுக்கு சினிமா பைனான்சியராக இருந்து வருபவர் அன்புச்செழியன். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருமான வரி துறையினர் இன்று திடீரென சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாக பைனான்சியராகவும் இருந்துள்ளார்.

    அன்புச்செழியன்

    அன்புச்செழியன்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொம்மனேந்தல் கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்தான் அன்புச் செழியன். அங்கிருந்து மதுரையில் குடியேறிய அவர், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சின்ன அளவில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார். அதோடு, மதுரை பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வந்தார். அப்போது, அவர் அதிமுக கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வந்தார். வளர்ப்பு மகனின் நட்பு கிடைக்கவே அவர் மூலம் பணத்தை வாங்கி வட்டிக்குக் கொடுத்து, தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். அதன் பின்னர்தான் அவர் சென்னை வந்து சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்.

    சினிமாதுறையில் வளர்ச்சி

    சினிமாதுறையில் வளர்ச்சி

    கோபுரம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். பல்வேறு படங்களுக்கு அன்புசெழியன் பைனானஸ் செய்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கும் விதமே அலாதியானது. இதற்காகவே தனக்கு கீழே மதுரை பகுதியைச் சேர்ந்த அடியாட்களை வைத்திருந்தார்.

    கைதான அன்புச்செழியன்

    கைதான அன்புச்செழியன்

    சுந்தரா டிராவல்ஸ் படத்தை எடுத்த தங்கராஜா என்பவருக்கு 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மிரட்டி எழுதி வாங்க முயன்றபோது, அவர் போலீசில் புகார் கொடுத்தார். அப்போதுதான் முதன்முதலில் அன்புச் செழியன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாகவே சினிமா துறையினருக்கு பைனான்ஸ் கொடுத்து தனி ராஜாங்கமே நடத்தி வருகிறார் அன்பு செழியன் இந்த நிலையில்தான் அன்புச்செழியன் வருமான வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார்.

    40 இடங்களில் சோதனை

    40 இடங்களில் சோதனை

    அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அல்லாது அவரது சகோதரர்கள் உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

    மதுரையில் சுற்றி வளைத்து ரெய்டு

    மதுரையில் சுற்றி வளைத்து ரெய்டு

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீறைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமானவரி துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    2020ல் ஐடி ரெய்டு

    2020ல் ஐடி ரெய்டு

    பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், அப்போது அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது.

     கலைப்புலி தாணு, எஸ்.ஆர் பிரபு வீடுகளில் ரெய்டு

    கலைப்புலி தாணு, எஸ்.ஆர் பிரபு வீடுகளில் ரெய்டு

    சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் உள்பட பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

     ஞானவேல் ராஜா அலுவலகத்தில் ரெய்டு

    ஞானவேல் ராஜா அலுவலகத்தில் ரெய்டு

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தி. நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ஒரே நேரத்தில் சினிமா பைனான்ஸ்சியர், தயாரிப்பாளர் வீடுகளில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+