Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எ.வ வேலு வீடு, நிறுவனங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை.. சிக்கியது என்ன? நீடிக்கும் மர்மம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஏ.வ. வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கல்வித்தந்தையாகவும், ஆன்மீகவாதியாகவும் இருக்கிறார் எ.வ.வேலு. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. பணம் அதிகம் புரளும் துறைகளை வைத்துள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

Income tax raid continues 4th day in A.Va Velu house and Colleges

சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஏ.வ. வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட தெற்கு திமுக செயலாளர் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மாவட்டத் துணை செயலாளராக பதவி வகித்த சாவல்பூண்டி சுந்தரேசன். இவர், தனது கட்சியினருடன் பேசிய ஆடியோ கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி வைரலானது. வாரிசு அரசியலுக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்திருந்த சாவல்பூண்டி சுந்தரேசன், அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும் அவர், ''கரூரில் ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில், 8 கல்வி நிறுவனங்கள், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், கிரானைட் நிறுவனம், திரைப்பட பைனான்ஸ் மற்றும் விநியோகிஸ்தர் தொழிலை அமைச்சர் எ.வ.வேலு செய்து வருகிறார்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது அவர், பொது வாழ்வில் அப்பழுக்கற்றவன் எனத் தெரிவித்தார். மேலும், தனக்கு ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில், 6 ஆயிரம் ஏக்கர் நிலம் என எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார்.

அப்போது, வருமான வரித் துறை சோதனை விரைவில் நடைபெற கூடும் என திமுகவினர் கூறி வந்தனர். எதிர்பார்த்தது போலவே கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையை தொடங்கி 4வது நாளாக தலைகீழாக புரட்டிப்போட்டு சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக அவர், அமைச்சர் எ.வ.வேலுவின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்கள் முகாமிட்டிருந்தார். அப்போது, முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகள், பிரபல கட்டுமான நிறுவனங்களாக காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், கரூரில் உள்ள வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+