IT raid: சென்னையில் ஐடி ரெய்டு.. காலையிலேயே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் இறங்கிய அதிகாரிகள்
சென்னை: சென்னையில் உள்ள தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை (Chennai IT raid) நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலையில் இருந்து வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இரும்பு பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிறுவனம் இரும்பு பொருள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் தான் காலை முதலே சோதனையானது நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனையில் வருமான வரித்துறை ஈடுபட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது. நிறுவனத்திற்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்ற ஐடி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனை தொடர்பாக விரைவில் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஐடி ரெய்டு நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தினர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது, கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications