பயங்கர குழப்பம்! "வருமான வரி ரீபண்ட் நிறுத்தி வைப்பு.." ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு போன மெசேஜ்
சென்னை: கடந்த சில நாட்களாகவே பல ஆயிரம் பேருக்கு வருமான வரி ரீஃபண்ட்கள் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளதாக மெசேஜ்கள் வருகிறது. பலருக்கும் என்ன தவறு நடந்தது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதுபோன்ற மெசேஜ் ஏன் வருகிறது.. இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உங்கள் மொத்த மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.. இது வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரி முறையைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், கடந்த சில நாட்களாக வருமான வரி தாக்கல் செய்த பலருக்கும் ஒரு மெசேஜ் போய் இருக்கிறது.

திடீரென போன மெசேஜ்
இது தொடர்பான போட்டோக்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். வருமான வரித் துறையிலிருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த மெயில் அல்லது மெசேஜ்களில் வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்ததில் முரண்பாடுகள் இருப்பதால், ரீஃபண்ட்கள் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு வந்த மெசேஜ்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பெரும்பாலானோருக்கு வருமான வரி தாக்கலின்போது பதிவு செய்யப்பட்ட விவரங்கள் முரண்பாடாக இருப்பதால் risk management கீழ் ரீபண்ட் பிராசஸ் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விரிவான தகவல்கள் மெயிலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிஸ்க் மேனேஜ்மெண்ட்
பலருக்கும் இந்த ரிஸ்க் மேனேஜ்மெண்ட் காரணமாகவே ரீபண்ட் பிராசஸ் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீஃபண்ட் கோரிக்கையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதால், அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு டிசம்பர் 31க்குள் திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோல ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு மெசேஜ் போய் இருக்கிறது. இதனால் வருமான வரி தாக்கல் செய்தோர் குழப்பத்தில் உள்ளனர். மேலும், பலருக்கும் எஸ்எம்எஸில் வந்த தகவல் ஒரு மாதிரியும், மெயிலில் வந்த தகவல் வேறு மாதிரியும் இருந்துள்ளது. இன்னும் சிலருக்கு எஸ்எம்எஸில் இதுபோல வந்தாலும் வருமான வரிப் போர்ட்டலில் செக் செய்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றே காட்டியுள்ளது.
ஒன்னும் புரியல
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "எனது வருமான வரிக் கணக்கு ரீபண்ட் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விவரங்கள் மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மெசேஜ் வந்தது. இதனால் நான் பயந்து போனேன்.. உடனடியாக மெயிலை செக் செய்தேன். ஆனால், அதுபோல எந்தவொரு மெயிலும் எனக்கு வரவில்லை. வருமான வரி போர்ட்டலில் செக் செய்தால் ரீஃபண்ட் என் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகக் காட்டுகிறது. இது ரொம்பவே குழப்புகிறது" என்றார்.
காரணம் என்ன!
ஏன் இதுபோல ஒரே நேரத்தில் மெசேஜ் போய் இருக்கிறது என்பது குறித்து பட்டய கணக்காளர் பிரதீக் பார்தா கூறுகையில், "பல ஆயிரம் பேருக்கு இந்த மெசேஜ் போய் இருக்கிறது. அதிலும் டிசம்பர் மாதம் போய் இருக்கிறது. ரீஃபண்ட் தொகை அதிகமாக இருக்கும்போது அல்லது 80C, 80D அல்லது HRA கோரிக்கைகள் படிவம் 16இல் உள்ள விவரங்களுடன் சரியாகப் பொருந்தாதபோது இது நிகழ்கிறது" என்றார்.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே இது தொடர்பாகவே பல்வேறு தரப்பினரும் புலம்புகிறார்கள். இது இணையத்தில் மிக பெரிய விஷயமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இருப்பினும், இது தொடர்பாக வருமான வரித் துறை இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications