நீங்க வருமான வரியை செலுத்திட்டீங்களா.. கூடுதலாக கட்டிட்டீங்களா.. அப்ப உங்களுக்குதான் இந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வருமானவரித்துறை முறையாக செலுத்தப்படுவது அவசியமாகும்.. அந்தவகையில், 2022-23ஆம் நிதியாண்டுக்கு வருமான வரித் தாக்கல் ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்...

இதற்காகவே, பொதுமக்கள் வசதிக்காக, தற்போது வருமான வரி துறை ஐடிஆர் 1 (ITR) மற்றும் ஐடிஆர் 4 (ITR 4) படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதியை தொடங்கியுள்ளது. ஐடிஆர் 1 மற்றும் 4 படிவங்கள் மாத சம்பளம் வாங்குபவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் ஆகியோர் இந்த படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

யாருக்கு ஐடிஆர் 1: ஐடிஆர் 1 படிவத்தை மாத சம்பளம் வாங்குவோர், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தனிநபர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

income tax refund refund 16 days if paid additional income tax information from income tax department cbdt chairman

ஐடிஆர் 4: (ITR 4): ஐடிஆர் 4 படிவத்தை ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தொழில் முனைவோர், தொழில்முறையாளர்கள், (professionals) தாக்கல் வேண்டும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாளர்கள் என கூறப்படும்.

இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.

ட்வீட்: இந்நிலையில், 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் வசதி ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதுகுறித்து, வருமான வரித்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தது. அதில், "2023-24ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு (AY) ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். ஏற்கெனவே ஐடிஆர் 1, 2 மற்றும் 4 தாக்கல் செய்வதற்கான எக்சல் (excel) வசதியும் உள்ளது" என்று வருமான வரித்துறை பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. வருமான வரித்துறை சார்பில் "சம்வாத்" அமர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.. இதில், சிபிடிடி என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.

குட்நியூஸ்: அவர் பேசும்போது, "வருமான வரி கணக்குகளை பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி துரிதமாக்கப்பட்டிருக்கிறது.. வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்ப செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த ஆண்டில் 26 நாட்களாக இருந்தது.. அது இப்போது, அதாவது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது... 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 42 சதவீதமாக உயர்ந்துள்ளது..

அதிக கணக்குகள்: கடந்த வருடம் ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன... இந்த வருட மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகி உள்ளன.. அதேபோல, வரி வசூலும், ரூ.2,480 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், அதிகாரி மற்றும் வரி செலுத்துவோர் நேருக்கு நேர் சந்திக்கமாலேயே 4 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பீடுகள் முடிக்கப்பட்டுள்ளன.. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2022-23ல் 'ஃபேஸ்லெஸ்' செயல்முறை தொடர்பான புகார்கள் 60 சதவீதம் குறைந்துள்ளது. 'ஃபேஸ்லெஸ்' முறையின் கீழ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகளை வரி அதிகாரிகள் தீர்த்து வைத்துள்ளனர்" என்றார் குப்தா.

மகிழ்ச்சி: கடந்த 2022-23 நிதியாண்டில், 80 சதவீத வழக்குகளில், ரிட்டர்ன் தாக்கல் செய்த முதல் 30 நாட்களில் 'ரீஃபண்ட்' வழங்கப்பட்ட நிலையில், இப்போது 16 நாட்களுக்குள் வருமான வரித் துறையால் ரிட்டர்ன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+