நாடு முழுக்க உள்ள.. பல கோடி சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்! இந்த முறை வருமான வரி refund அதிகரிக்கிறது
சென்னை: 2025-26 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது. இதனால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரீபண்ட் இந்த ஆண்டு உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய காலக்கெடு வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை துல்லியமாக தாக்கல் செய்ய அதிக நேரத்தை வழங்குகிறது. அதோடு e filing செயல்முறையை சீராக்க உதவுகிறது. பொதுவாக, ITR தாக்கல்களுக்கான காலக்கெடு மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆகும். ஆனால் இந்த நீட்டிப்பு காரணமாக கூடுதல் ரீபண்ட் இந்த ஆண்டு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் வரிகள் மீது விதிக்கப்பட்ட வட்டிகளுக்கான interest payouts இந்த ஆண்டு அதிகம் ஆகலாம். இதனால் வருமான வரி ரீபண்ட் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 244A இன் கீழ், அதிகமாகச் செலுத்தப்பட்ட வரிகளுக்கு மாதத்திற்கு 0.5% என்ற எளிய வட்டியை, refund கொடுக்கும் வரை வருமான வரித்துறை செலுத்த வேண்டும். இந்த வட்டி வரிக்கு உட்பட்டது என்றாலும், பல வரி செலுத்துவோர் இதில் வரி இல்லாத பலன்களை பெற முடியும். இந்த வட்டி தொகை இந்த ஆண்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால்.. வருமான வரி ரீபண்ட் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் வருமான வரி தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கு பல்வேறு சி.ஏக்கள் தரப்பில் இருந்து முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்வதற்கு ஜூன் 15 வரை காத்திருக்கும்படி சம்பளதாரர்களுக்கு சி.ஏக்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்வதற்கு ஜூன் 15, 2025 வரை காத்திருக்க வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுவதற்கான முக்கிய சில காரணங்கள் உள்ளன.
ITR படிவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வருமான வரித் துறை வருமான வரி வருமானத்தை சமர்ப்பிக்கத் தேவையான ஆன்லைன் தாக்கல் பயன்பாடுகளை இன்னும் வெளியிடவில்லை. அதாவது e filing இன்னும் திறக்கவில்லை.
இது போக TDS சான்றிதழ்களுக்காகக் காத்திருக்க வேண்டும். ITR தாக்கல் செய்தால், கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கு மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் பெற வேண்டும். மே 31க்கு பிறகே அதற்கு விண்ணப்பிக்க முடியும். அது வருவதற்கு எப்படியும் ஜூன் 2ம் வாரம் ஆகிவிடும்.
இதனால் சம்பளம் வாங்கும் நபர்களுக்கான படிவம் 16, மற்றவர்களுக்கு படிவம் 16A போன்ற மூலத்தில் வரி கழிக்கப்படும் (TDS) சான்றிதழ்கள் பொதுவாக ஜூன் 15 ஆம் தேதிதான் வழங்கப்படும். இந்த ஆவணங்களைப் பெறுவதற்கு முன்பு ITR தாக்கல் செய்வது உங்கள் வருமானத்தில் முழுமையற்ற அல்லது தவறான தகவல்களை ஏற்படுத்தக்கூடும். பிழைகளும் ஏற்பட காரணமாக அமையும்.
உங்கள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி வரவுகள் தொடர்பான வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவை பொதுவாக ஜூன் நடுப்பகுதியில் முழுமையாக புதுப்பிக்கப்படும். இந்த அறிக்கைகள் முழுமையடைவதற்கு முன்பு தாக்கல் செய்வது முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். ITRல் பிழைகள் ஏற்படவும் காரணமாக அமையும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications