ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சத்தமில்லாமல் செய்த சாதனை.. வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனைகளில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையும் ஒன்றாகும். இது கடந்த 1664 ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்திருந்தாலும், 1772ம் ஆண்டு சென்டரல் ரயில் நிலையத்திற்கு எதிரே மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் சுமார் 2,722 படுக்கைகள் இருக்கின்றன.

என்னதான் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வந்தாலும், அது பொது மருத்துவமனைகள்தான் போன்று வராது என்பதற்கு கொரோனா தொற்று காலகட்டம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இந்த காலத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிய, ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாசலில் அணிவகுத்து நின்றன. இருப்பினும் மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் வைத்தே மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இது அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை பொதுமக்களுக்கு அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் இந்த நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்யும் விதமாக மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 41 வெளிநாட்டு நோயாளிகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதிகபட்சமாக வங்கதேசத்தில் இருந்து 26 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், இலங்கையில் இருந்து 2 நோயாளிகளும், நைஜீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 14 நோயாளிகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்பவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறிப்பிடத்தக்கது. ஏனெனில், சுற்றுலா வந்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதனை சரி செய்ய ரூ.10 லட்சம் செலவாகும் என்று தனியார் மருத்துவமனைகள் கூறிய நிலையில், அவரை உறவினர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரச்னையை அறிந்துக்கொண்டு உடடினயாக அறுவை சிகிச்சையில் இறங்கினர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
தற்போது அப்துல் மாலிக் நலமுடன் இருக்கிறார். தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் உட்பட அனைத்திற்கும் ரூ.96 ஆயிரம் மட்டுமே செலவாகியுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். தரமான மருத்துவம், மற்றும் குறைந்த கட்டணத்தில் சேவை ஆகியவை அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையையும், அதன் தேவையையும் மேலும் அதிகரித்திருக்கிறது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?












Click it and Unblock the Notifications