24 மணி நேரத்தில் அடுத்தடுத்து தமிழகத்தையே உலுக்கிய குற்றங்கள்! பெண்கள் முக்கிய டார்கெட்! லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், படுபாதக செயல்கள் பல அரங்கேறி மக்களை நிலைகுலைய வைத்துள்ளன.
*தஞ்சாவூரில் அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்துள்ளார்.
*ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார்.
*மதுரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணுக்கு நடுரோட்டிலேயே பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் பைக்கில் வந்த இளைஞர்.
*வேலூரில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி வழக்கறிஞர் கொலை முயற்சி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை இன்று அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக கண்ணன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரும் பார்க்கும் போதும் பயமின்றி குற்றவாளி கோழியை வெட்டுவதை போல வழக்கறிஞர் தலை மீது அரிவாளால் வெட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் ஆசிரியர் கொலை: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ரமணி (26) என்பவரை பள்ளிக்குள்ளேயே புகுந்து, மதன் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். அலறல் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஆசிரியர்கள், ஆசிரியை ரமணியை மீட்டு அரசு மருததுவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதனை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், ஆசிரியை ரமணியை மதன் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதால் ரமணியை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மதன் கூறியுள்ளார்.
மதுரையில் பாலியல் அத்துமீறல்: மதுரை, தபால் தந்தி நகர் தனியார் பள்ளி அருகே பெண் ஒருவர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் கூட அணியாமல் அவ்வழியாக வந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பட்டப்பகலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். செல்போனை பார்த்தபடி வந்த பேண்ட், டீசர்ட் அணிந்த அந்த பெண் பைக்கில் வந்த இளைஞர் அத்துமீறியதால் திடுக்கிட்டு விக்கித்து நிற்கிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதட்டததை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த மாதம் கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம் இரண்டு முறை இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: வேலூரில் 14 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் அந்த சிறுமியின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அயனாவரத்தில் இளம்பெண்ணுக்கு வெட்டு: சென்னை அயனாவரம் கே.எஸ்.சாலையில் இளம்பெண் ஒருவருடன் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது, பொதுமக்கள் முன்பே அவர்களை இளைஞர் ஒருவர் வழிமறித்து அந்த இளைஞரை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணையும் அந்த இளைஞர் கையில் வெட்டினார். வெட்டப்பட்ட இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இச்சம்பம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு போலீஸார் மீதான பயம் குறைந்ததற்கான அத்தாட்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications