இவர்தான் எதிர்காலம்.. பல இடங்களில் தேடி.. கடைசியில் தமிழருக்கு டிக் அடித்த பிசிசிஐ.. நடந்தது என்ன?
சென்னை; பல கட்ட தேடலுக்கு பின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணிக்குள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கே. எல் ராகுல் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி கேப்டன்சியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ருத்துராஜ், இஷான் கிஷான், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். அவர் பவுலிங் போடாத நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பேட்டிங் -பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் அணியில் இடம்பெற்று வந்தார். ஆனால் பவுலிங் செய்யாத காரணத்தால் அவரை ப்யூர் பேட்ஸ்மேனாக களமிறக்க பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ
ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் பிசிசிஐ வேறு ஆல் ரவுண்டரை கொண்டு வரப்போவதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இதற்காக பிசிசிஐ தீவிர தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்தன. அதன்படி நடந்து வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பவுலிங் ஆல்ரவுண்டரை பிசிசிஐ தேடி வருவதாக தகவல்கள் வந்தன. பாஸ்ட் பவுலிங் + பேட்டிங் செய்ய கூடிய நபரை பிசிசிஐ தேடி வந்தது.

குறைவு
ஆனால் சையது முஷ்டாக் தொடரில் பினிஷர்கள் நிறைய பேர் இருந்தனர். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் பலர் இருந்தனர். ஆனால் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் பெரிதாக ஆடவில்லை. ஒன்று நன்றாக பவுலிங் போடுவார்கள் ஆனால் பேட்டிங் செய்ய மாட்டார்கள். அல்லது நன்றாக பேட்டிங் செய்வார்கள் ஆனால் பாஸ்ட் பவுலிங் போட மாட்டார்கள். இதற்கு இடையில்தான் தமிழரான வெங்கடேஷ் ஐயருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது.

வெங்கடேஷ் ஐயர்
இந்திய அணியின் புதிய பாஸ்ட் பவுலிங் - பேட்டிங் ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் ஓப்பனிங் இறங்கினாலும் இந்திய அணியில் இவர் மிடில் ஆர்டரில் ஆடுவார். பெரும்பாலும் பினிஷர் ரோலில் இவர் களமிறங்க உள்ளார். பிசிசிஐ அதற்கு ஏற்றபடி இவரை தயார் செய்ய உள்ளது.

தயார்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவருக்கு நிறைய வாய்ப்பு வழங்கப்படும். ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இடத்தில் இவரை தயார் செய்ய உள்ளது. ஆள் உயரமாக இருக்கிறார். நல்ல கிரிக்கெட் ஷாட் ஆடுகிறார். பவுலிங்கும் நன்றாக போடுகிறார் என்பதால் இவர் நல்ல தேர்வாக இருப்பார். ஐபிஎல் போட்டிகளில் இவர் வெறும் 10 ஆட்டங்களில் 370 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி பைனல் வர முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

விக்கெட்
ஆனால் இவரை அணியில் எடுக்க ஐபிஎல் மட்டும் காரணம் இல்லை. தமிழரான இவர் மத்திய பிரதேசத்தில் வளர்ந்தவர் என்பதால் அம்மாநில அணிக்காக சையது முஷ்டாக் கோப்பை தொடரில் ஆடிக்கொண்டு இருக்கிறார். அதில் இதுவரை 4 போட்டிகளில் 154 ரன்கள் எடுத்துள்ளார். 5 விக்கெட் எடுத்துள்ளார். இவர் இரண்டாவது அதிகபட்ச விக்கெட் டேக்கர் ஆவார்.

கடந்த மேட்ச்
அதிலும் பீகாருக்கு எதிரான கடந்த போட்டியில் 2 விக்கெட் எடுத்து 2 மெயின்டன் ஓவர்களை வீசி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து வெங்கடேஷ் ஐயர் அசத்தினார். இதனால் இவரின் பவுலிங்கும் மெருகேறி உள்ளது. எனவே இந்தியாவின் புதிய பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக களமிறக்கப்பட உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications