Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கப் சிப் மோடில் ‘இந்தியா’ கூட்டணி.. 5 மாநில தேர்தலில் ஆப்சென்ட்! காரியம் சாதிக்குமா காங்கிரஸ் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் என்ன செய்கிறது? விரிவாக பார்ப்போம்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன. நவம்பர் மாதம் 5 மாநிலங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையிலும், மிசோரத்தில் எம்.என்.எஃப் - காங்கிரஸ் - ZPM ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

INDIA alliance is seen absent in 5 state election - What is the plan of the opposition?

இதில் 5 மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்கட்சியாகவோ நேரடி போட்டியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான செமி பைனல் என்று அழைக்கப்படும் இந்த 5 மாநில தேர்தலில் என்ன செய்கிறது? என்ற கேள்வி எழுகிறது. அதன்படி பார்த்தால் ஒரு மாநிலத்தில் மட்டும் அரசியல் செய்து வரும் கட்சிகள் காங்கிரஸின் வெற்றியை எதிர்பார்த்து இருக்கும்.

ஆனால், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா போன்ற கட்சிகள் பல மாநிலங்கள் சில தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் இந்த 5 மாநில தேர்தல் பணிகள் தொடங்கியவுடன் இந்தியா கூட்டணி கூட்டங்கள், பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த கட்சிகள் 5 மாநில தேர்தலை பயன்படுத்தி தங்கள் ஒற்றுமையை மீண்டும் நிரூபித்து இருக்கலாம் என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு வழியிலும் காங்கிரஸ் வேறு வழியிலும் செல்கிறது. இது இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை போன்ற தோற்றத்தை காட்டுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் குறைந்த பட்ச செயல்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாக கூறினாலும், அதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். ஆனால், பாஜகவின் செயல்பாடுகள் எல்லாம் மக்களவைத் தேர்தலை நோக்கியே இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த அமைதி என்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டு உள்ளது.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி கலந்துகொண்ட காங்கிரஸின் விஜயாபெரி பஸ் யாத்திரை என்பது அம்மாநிலத்தில் வரவேற்பை பெற்று உள்ளதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் ஆட்சியமைக்கும் வகையில் அதற்கு ஆதரவு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற இந்த யாத்திரை, அதில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டது போன்றவை அக்கட்சிக்கு சாதகமாக அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு ராகுல் காந்தி தெலுங்கானாவில் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரைக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனை எதிர்கொள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு உள்ளது. அவருக்கும் அம்மாநிலத்தில் ஏகோபித்த மக்கள் செல்வாக்கு உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கிறார். பீகாரில் சாதி வாரி இடஒதுக்கீட்டிற்கு பிறகு மற்ற மாநிலங்களிலும் இதே வாக்குறுதியை காங்கிரஸ் வழங்கி உள்ளது. அத்துடன் இலவசங்களும் தேர்தல் வாக்குறுதிகளிலும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+