கவனிச்சீங்களா? இந்தியா கூட்டணி மீட்டிங்கிற்கு ஸ்டாலின் போன நேரம் பார்த்து! திரும்ப நடந்த "சம்பவம்"
சென்னை: இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில்தான் தேசிய அளவில் நடக்கும் சம்பவம் ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் கவனம்: இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில்தான் தேசிய அளவில் நடக்கும் சம்பவம் ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக பக்கம் பாஜக தற்போது மொத்தமாக போகசை திருப்பி உள்ளது. காங்கிரசை எதிர்ப்பதை விட திமுகவைத்தான் பாஜக அதிகம் எதிர்க்க தொடங்கி உள்ளது.
முன்னதாக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்த போது அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார்.
ஸ்டாலினுக்கு எதிராக டிரெண்ட்: பீகாரில் முதல்கட்ட கூட்டம் நடந்த போதும் சரி, இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கூட்டம் நடந்த போதும் சரி.. ஸ்டாலினுக்கு எதிராக பாஜக தலைவர்கள் தீவிரமாக பேசினர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்றும் மும்பைக்கு ஸ்டாலின் செல்லும் நேரத்தில் மீண்டும் அவருக்கு எதிராக பாஜகவினர் சார்பாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஒன்று செய்யப்பட்டு வருகிறது. ஸ்டாலினை இகழும் விதமாக வார்த்தை ஒன்றை குறிப்பிட்டு இந்த டிரெண்ட் மேற்கொள்ளப்படுகிறது. பீகார் மற்றும் பெங்களூர் கூட்டத்திலும் இதேபோல் ஸ்டாலினுக்கு எதிராக டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் செய்யப்படுகிறது.

ஏன்? : திமுகவை மட்டும் இப்படி பாஜக தாக்க பின்வரும் விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன. அதன்படி 1. எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுக பங்கு வகிக்கிறது. 2. பல மாநிலங்களில் பாஜக தோல்வி அடைய காரணமான பெண்களுக்கு ரூ.1000, இலவச பஸ் போன்ற திட்டங்களின் மாஸ்டர்மைண்ட் திமுகதான். 3. தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி பார்முலாவை தேசிய அளவில் கொண்ட செல்ல திமுக நினைக்கிறது.
4. காங்கிரஸ் கட்சியுடன் நட்பாக உள்ள திமுக மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைய பாலமாக உள்ளது. 5. தேசிய அளவில் எப்படி கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளை வழங்குகிறது. 6. கொள்கை ரீதியாக பாஜகவை பெரிதாக கட்சிகள் எதிர்க்காத நிலையில் திமுகவின் கொள்கை பாஜகவின் கொள்கைக்கு அப்படியே எதிராக உள்ளது. 7. மாநில சுயாட்சி என்ற கொள்கையை பல மாநிலங்களுக்கு கடத்துகிறது.. இந்த 7 விஷயங்கள்தான் பாஜகவை அச்சுறுத்துவதால் நேரடியாக திமுகவை பாஜகவினர் தாக்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications