நாளை இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்.. சென்னை ரசிகர்களுக்கு நல்ல ஆபர்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை(புதன்கிழமை) இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் ஆபரை அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் நடந்து வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று அசத்தியது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமாக தோற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

தொடரை வெல்வது யார்?
இந்நிலையில் தொடரை கைப்பற்றுவது யார்? என்பதை நிர்ணயம் செய்வதற்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் எந்த அணி ஜெயிக்கிறதோ அதுவே ஒருநாள் தொடரை வெல்லும். இதனால் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற போராடும். இதனால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர்.

ரசிகர்கள் ஆர்வம்
மேலும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியை நேரில் காண உள்ளனர். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர். இதனால் போட்டிக்கான டிக்கெட் சமீபத்தில் முழுமையாக விற்று தீர்ந்தது.

இலவச பேருந்து வசதி
இந்நிலையில் தான் போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான இலவச பேருந்து வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

எங்கிருந்து செல்லலாம்?
இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ ரயில் அரசினர் தோட்டம்(Government Estate Metro Station) முதல் சேப்பாக்கம் எ்மஏ சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

பீக்ஹவர்ஸ் நேரம் நீட்டிப்பு
22.03.2023 அன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல்மிகு நேரத்தை(Peak Hours)மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைக்கு பதில் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளது. இந்த தருணத்தில் சென்னை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்தி கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும் மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்
மேலும் இந்த போட்டியையொட்டி சென்னையில் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிய பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications