சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

232 ஆப்களுக்கு ஆப்பு.. 138 சூதாட்ட செயலி.. 94 கடன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை! பரபர காரணம்-பின்னணி

இந்தியாவில் 138 சூதாட்ட செயலி மற்றும் 94 கடன் வழங்கும் செயலி என மொத்தம் 234 ஆப்களுக்கு மத்திய அரசு புதிதாக தடை விதிக்கும் நடவடிக்கையை துவங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் சில செயலிகள் சீனாவுடன் சேர்ந்து மக்களின் சுயவிபரங்களை திருடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து அந்த செயலிகளை மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 138 சூதாட்ட செயலி மற்றும் 94 கடன் செயலி என மொத்தம் 232 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் சிக்கலை சந்தித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பலரும் பணத்தை இழக்கும் நிலையில் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

இதனால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தற்கொலையும் கூட செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க செல்போன் செயலிகள் மூலம் இந்தியர்களின் முக்கிய விபரங்கள் திருடப்படுவதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.

இனி சர்ர்னு பறக்கலாம்! ஸ்லீபர் பெர்த் வந்தே பாரத் + புல்லட் ரயில்.. அமைச்சர் தந்த முக்கிய அப்டேட் இனி சர்ர்னு பறக்கலாம்! ஸ்லீபர் பெர்த் வந்தே பாரத் + புல்லட் ரயில்.. அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்

மீண்டும் தடை

மீண்டும் தடை

இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் தகவல்களை திருடும் செயலிகளை அறிந்து அதனை தடை விதித்து வருகிறது. இதுதவிர சீனா மற்றும் சீனாவுடன் தொடர்பு கொண்ட செயலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள சீன தொடர்புடைய செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

232 செயலிகளுக்கு தடை

232 செயலிகளுக்கு தடை

தற்போதைய நடவடிக்கையின்படி 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக இந்த செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு கருதி அவசர நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய அரசு சார்பில், ‛‛இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமாகன வகையில் உள்ள செயலிகளை தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு69யின் கீழ் தடை செய்யப்படுகிறது'' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. .

நடவடிக்கை ஏன்?

நடவடிக்கை ஏன்?

சமீபத்தில் இந்திய பாதுகாப்பு கருதி மத்திய உள்துறை அமைச்சகம் சில பரிந்துரைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு வழங்கி இருந்தது. அதனப்படையில் தான் தற்போது 232 செயலிகளை இந்தியாவில் தடை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கி உள்ளது.

இதற்கு முன்பு நடந்தது என்ன?

இதற்கு முன்பு நடந்தது என்ன?

இந்தியாவில் சீனா தொடர்புடைய செயலிகளை தடை செய்வது ஒன்றும் புதியது அல்ல. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்திய எல்லையில் சீனா வாலாட்டிய நிலையில் 2020 ஜூன் மாதம் டிக்டாக், எக்ஸ்சென்டர், சிஇன், கேம்ஸ்கேனர் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பரில் 118 செயலிகளுக்கும், 2020 நவம்பரில 43 செயலிகளுக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் 54 சீன செயலிகளுக்கம் தடை விதித்து இருந்தது. அந்த வரிசையில் தான் தற்போது 232 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There are allegations that some apps in India are stealing people's personal information along with China. Subsequently, the central government is banning those apps. In that way, the central government has decided to block a total of 232 cell phone apps in India, including 138 gambling apps and 94 credit apps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X