"படுக்கைக்கு கூப்பிடறாங்க".. டபுள்மீனிங், முனகல் பாட்டு.. டிக்டாக்குக்கு "டாட்" வைத்த மோடி சர்க்கார்
டிக்டாக் செயலிக்கு மோடி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
சென்னை: "படுக்கைக்கு கூப்பிடறாங்க" என்ற புலம்பல் இனி எழாது.. முக்கல், முனகல் பாட்டு சத்தம் கேட்காது.. டபுள் மீனிங் வசனங்கள் காதில் விழாது.. டிக்டாக்கை இழுத்து பூட்டியதற்கான காரணம் வேறாக இருந்தாலும், ஒருவகையில் ஆபாச புழுக்களிடம் இருந்து நமக்கும் இனி ஒரு விடிவுகாலம்தான்!!
Recommended Video
இந்த டிக்டாக் ஆப் வேண்டவே வேண்டாம் என்று கோர்ட் பலமுறை சொல்லியும் யாருமே அப்போது கேட்கவில்லை.. இந்த ஆப் திறமைகளை வெளிப்படுத்த உதவக்கூடியது என்று சொல்லி வாதாடினர்.. அதற்கு பிறகு சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது! ஆனால் ஏன்தான் அனுமதி வழங்கியதோ என்று பல சூழல்களில் கேட்க வைத்துவிட்டது.
உண்மையிலேயே நாலு சுவற்றுக்குள் அடைந்திருக்கும் பெண்களுக்கு ஒரு வடிகாலாக, உள்ளுக்குள் பொதிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவியா டிக்டாக் இருப்பதை மறுக்க முடியாது.. நடிகைகளை போலவே நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என ஆடல், பாடல், நடிப்பு என பின்னி எடுக்கவே செய்தனர்.

கவர்ச்சி
அவர்களை மனம் திறந்து பாராட்டாமல் இருக்க முடியாது.. எனினும் ஒருசிலரிடம் இந்த டிக்டாக் சிக்கி சீரழிந்ததையும் ஏற்க வேண்டும்.. இதில் கொடுமை என்னவென்றால், ஆபாச டிக்டாக் என்று தனியாகவே ஒன்றை உருவாக்கிவிட்டார்கள்.. இளம்பெண்கள் தங்களின் எல்லைமீறின கவர்ச்சியில் புரண்டு நெளிந்து வீடியோக்களை பதிவிட்டனர்.. அப்படிப்பட்டவர்களுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் கிடைத்தது ஆச்சரியம்தான்.

இலக்கியா
ரவுடி பேபி சூர்யா, இலக்கியா, மதுரை சுகந்தி என்று இந்த பட்டியல் நீள்கிறது.. திடீரென ஆபாசமான உடையுடனும் தோன்றுவார்கள்.. லைக்குகள் அதிகமாக, அதிகமாக, அவர்களின் உடுத்தும் உடையின் அளவும் குறைய ஆரம்பித்தது.. பாடும் பாடல்களும் அவ்வளவும் முக்கல், முனகல் பாடல்கள்தான்.. வசனங்கள் பூராவும் டபுள் மீனிங்தான்.. நல்ல வசனங்கள் கூட இவர்களிடம் மாட்டிக் கொண்டபோது, ஆபாசமாக தெறித்து விழுந்தது. விளைவு, எங்களை படுக்கைக்கு கூப்பிடுகிறார்கள் என்று கதறி கொண்டு இன்னொரு வீடியோவை வெளியிடுகிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஜிபி முத்து
ஜிபி முத்து என்பவர் தன் எளிய, யதார்த்த பேச்சால் மக்களை கவர்ந்தாலும், கெட்ட வார்த்தைகளை தவிர்த்துவிட்டு இவர்களால் டிக்டாக் வீடியோ செய்ய முடியவில்லை என்பதே உ ண்மை.. ஆனால், டிக்டாக் மட்டும் இல்லையென்றால், இந்த பெண்கள் இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருப்பார்களா என்று தெரியாது.. இவர்களுக்கு வாழ்க்கை தந்ததே இந்த டிக்டாக்தான்.

என்ன செய்வார்கள்?
ராத்திரி, பகல் என்று டிக்டாக்கே கதி என்று விழுந்து கொண்டிருந்தவர்கள் இனி என்ன செய்வார்கள்? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. ஒருவேளை யூடியூபுக்குள் புகுந்துவிடுவார்களோ, அல்லது ஃபேஸ்புக்கை கையில் எடுப்பார்களோ தெரியாது.. ஆனால், குடும்பங்கள் கெட்டு நடுத்தெருவுக்கு வராமல் இருந்தால் சரி.. திரும்பவும் எங்களை படுக்கைக்கு கூப்பிடுகிறார்கள் என்று கதறாமல் இருந்தாலும் சரி!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications