மோசமான சல்பர் டை ஆக்ஸைடு வாயு.. அதிகம் உமிழும் சென்னை, நெய்வேலி.. சுற்றுச்சூழல் நிபுணர்கள் அதிர்ச்சி
சென்னை: சல்பர் டை ஆக்ஸைடு வெளியேறும் நகரங்களில் சென்னைதான் உலகின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
உலகளவில் சல்பர் டை ஆக்ஸைடை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து 5ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆய்வை கிரீன்பீஸ் இந்தியா மற்றும் எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று பற்றிய ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ நடத்தி அண்மையில் அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கையில் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வது 6 சதவீதம் குறைந்துள்ளது.

சீனா மூன்றாவது இடம்
இது நான்காண்டுகளில் மிகப் பெரிய சரிவாக கருதப்படுகிறது. எனினும் இந்தியா தொடர்ந்து 5ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சல்பர் டை ஆக்ஸைடை இந்தியா 19 சதவீதம் உமிழ்ந்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நுரையீரல்
சல்பர் டை ஆக்ஸைடு காற்றை விஷத்தன்மையுடன் மாசுப்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் இளவயதில் மரணம் ஏற்படுவது போன்றவை நடக்கும். இந்த வாயு சுவாச மண்டலத்தையும் நுரையீரலையும் கடுமையாக பாதிக்கிறது.

சென்னை, நெய்வேலி
இந்த அறிக்கையின் படி இந்த அபாயகரமான வாயு வெளியேறும் நகரங்களில் சிங்க்ராலி, நெய்வேலி, சிபாட், ராமகுண்டம், சந்திரபூர், விசாகப்பட்டினம், சென்னை, சூரத், கோர்பா, முந்திரா உள்ளிட்டவை உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா
தமிழகத்தில் சென்னை, நெய்வேலியில் சல்பர் டை ஆக்ஸைடு அதிகம் உமிழப்படுவதாக வந்த அறிக்கையால் சுற்றுச்சூழலியலாளர்கள் கவலையில் உள்ளனர். இந்த வாயுவால் இருமல், மூச்சு பிரச்சினை, ஆஸ்துமா உள்ளிட்டவை ஏற்படும். இந்த வாயு இதய நோய்களையும் உண்டாக்கும் என்பதால் சென்னை, நெய்வேலி மக்களை கவலையடையச் செய்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications