‛பாரத்’ என பெயர் மாறும் இந்தியா? தவறு இல்லையே.. டிஆர் பாலு சொன்ன ஒற்றை வார்த்தை! அப்போ உறுதிதானா?
சென்னை: இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கேள்விக்கு திமுகவின் பொருளாளரும், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டிஆர் பாலு பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு டின்னர் விருந்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு அளிக்கிறார். இதற்காக அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அழைப்பிதழ் தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது பொதுவாக ஜனாதிபதி சார்பில் வெளியாகும் அழைப்பிதழ் மற்றும் அறிவிப்புகள் என்பது ‛President of India' என வெளியாகும். ஆனால் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழ் என்பத ‛President of Bharat' என வெளியாகி உள்ளது. இதனால் தான் வரும் 18 ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் டெல்லியில் இன்று திமுகவின் பொருளாளரும், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டிஆர் பாலு பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு டிஆர் பாலு, ‛‛பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தை ரொம்ப நாளாக இருக்கிறது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. ஏனென்றால் பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. அரசியலமைப்பில் இருப்பதை நாம் இல்லை என கூற முடியாது'' என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்ததால் தான் ‛பாரத்' என கூறுவதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு டிஆர் பாலு, ‛‛பாஜகவுக்கு லோக்சபாவில் 303 எம்பிக்கள் உள்ளனர். அதனால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதை தான் அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. மேலும் தற்போதைய யூகங்களுக்கு நாம் பதிலளிக்க முடியாது.
அதேவேளையில், ‛பாரத்' என்பது தவறு என கூறிவிட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது. இதனால் அவர்கள் அப்படி செய்வது தவறு என சொல்லிவிட முடியாது. எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளோம். ‛இந்தியா' என்ற பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது. ஏனென்றால் வரும் தேர்தலில்களில்‛இந்தியா' VS மோடி என்று தான் வரும். லட்சக்கணக்கான முறை இது தான் உச்சரிக்கப்படும்'' என்றார்.
இதையடுத்து ‛தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக இப்படி செய்கிறதா?'' என கேள்வி கேட்கப்பட்து. அதற்கு டிஆர் பாலு, ‛‛இப்படி செய்வதால் தேர்தலில் உபாயம் தேட நினைக்கின்றனர். ஆனால் ‛பாரத்' என சொல்வதால் பாஜக வெற்றி பெற முடியாது. அதோடு பாரத் என்ற வார்த்தை இதற்கு முன்பில் இருந்தே இருக்கிறது. அப்போது கிடைக்காத வெற்றி என்பது இப்போது கிடைத்து விட போகிறதா?.
மேலும் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்திலும், அதற்கு முன்பும் இருக்கிறது. இதனை ஒருசில நாட்களில் மாற்றியமைக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் மாற்றியமைக்க முடியாது. அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணி என நாங்கள் பெயர் வைத்ததால் அதற்கு பதில் வேறு சொற்றொடரை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதனால் பெரிய வெற்றியை அவர்களால் பெற முடியாது'' என்றார்.
மேலும், ‛இந்தியாவை பாரத் என அழைக்க வரும் கூட்டத்தொடரில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தால்..'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிஆர் பாலு, ‛‛மசோதா கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பாரத் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது'' என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிஆர் பாலு, ‛‛சிறப்பு கூட்டத்தில் என்ன பொருள் விவாதிக்கப்பட உள்ளது. 4 நாளில் என்ன முடிவு எடுக்க முடியும். இதெல்லாம் விந்தையாக இருக்கிறது. இந்த ஆட்சியில் நடைமுறைக்கு சாத்தியமில்லா விஷயங்களை கொண்டு வருகின்றனர். ஒருவேளை பெண்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றத்தில் உரிமை கொடுக்கும் விஷயங்களை கொண்டு வரலாம். இதற்கெல்லாம் வாய்ப்பு உள்ளது'' என்றார்.
இதையடுது்து, ‛‛பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவது நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் உள்ளது. அது கொண்டு வரப்பட்டால் திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்'' என கேட்கப்பட்டது. அதற்கு டிஆர் பாலு, ‛‛அந்த பிரச்சனை கொண்டு வரப்பட்டால் திமுக பேசுவோம். ‛இந்தியா' கூட்டணியிலும் பெண்களுக்கான உரிமை இல்லை என கூறமுடியாது. பாசிட்டிவ்வாக தான் அப்ரோச் செய்வோம்.'' என்றார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications