கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவை முந்திட்டோம் என மத்திய அரசு குஷி- ஸ்டாக் இல்லையே என திண்டாடும் தமிழகம்
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை முந்திவிட்டதாக மத்திய பா.ஜ.க. மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. ஆனால் அனுப்ப வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுக்காததால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியே நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் ஆர்வம்
கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் கிராமப்புறங்களில் விலகி உள்ளது. இதனால் நீண்டவரிசைகளில் நின்று ஆர்வமுடன் மக்கள் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர்.

32 கோடி பேருக்கு தடுப்பூசி
இன்றைய காலை நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32,36,63,297 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரைவிட அதிகம் என்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில் மொத்தம் 32,33,27,328 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி மகிழ்ச்சி
இந்த தகவலை சமூக வலைதளங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி உள்ளிட்டோரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தடுப்பூசி முகாம்கள் மூடல்
அதேநேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. சென்னையில் வெறும் 5,000 டோஸ்கள் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

தடுப்பூசி பற்றாக்குறை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு போதுமான கொரோனா தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதனால் சென்னையில் மட்டும் 45 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications