"ஆபீஸ் ரொமான்ஸ்.." இந்தியா 2வது இடம்.. கள்ள உறவில் நாட்டிலேயே காஞ்சிபுரம் தான் முதலிடமாம்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக மாறி வருகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய உறவுகளிலும் கூட பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அப்படித் தான் சமீபத்தில் நடத்தப்பட்ட இரு ஆய்வுகளில் இந்தியாவில் ஆபீஸ் ரொமான்ஸ் மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவு பரவலாக அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஆபீஸ் ரொமான்ஸ் உலகெங்கிலும் பரவலாக இருந்தாலும், இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ரகசிய உறவுகள் குறித்த தளமான ஆஷ்லே மேடிசன் (Ashley Madison), யூகவ் (YouGov) நிறுவனத்துடன் இணைந்து நடத்திய சர்வதேச ஆய்வில் ஆபீஸ் ரொமான்ஸில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India offbeat

இந்தியா இரண்டாவது இடம்

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா உட்பட 11 நாடுகளில் மொத்தம் 13,581 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஆபீஸில் ஒருவருடன் காதலில் இருந்தவர்கள் அல்லது தற்போது காதலித்து வருவோர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்த லிஸ்டில் மெக்சிகோ முதலிடத்தைப் பிடித்த நிலையில், இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆபீஸ் ரொமான்ஸ் என்பது சிக்கலானவை என்றாலும், இந்தியாவில் அவை சாதாரணமாகவே இருப்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இந்தக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களும், வேலை செய்யும் பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய வரம்புகள் குறித்து கடுமையான ரூல்களை போட்டாலும் கூட இது ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

20ல் 4 இந்தியர்கள்

இந்த ஆய்வின்படி, 10ல் 4 இந்தியர்கள் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்வோரை டேட்டிங் செய்துள்ளனர் அல்லது தற்போது இப்போது டேட்டிங் செய்து வருகிறார்கள். இந்தியாவில் அலுவலகங்களில் ரிலேஷன்ஷிப் எந்தளவுக்கு பொதுவாக மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்த லிஸ்டில் முதலிடத்தில் மெக்சிகோ இருக்கிறது. அங்குக் கிட்டத்தட்ட 43% பேர் சக ஊழியருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். இந்தியாவில் இது 40%ஆக இருக்கிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் உள்ள 30%ஐ விட மிக அதிகமாகும்.

இதில் பாலின ரீதியாகவும் வித்தியாசம் இருக்கிறது. இந்த ஆய்வில் பதிலளித்த ஆண்களில் 51% பேர் சக ஊழியருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதோடு, சிலர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத் தயார் என்று கூறியுள்ளனர். அதேநேரம் பெண்களில் 36% பேர் சக ஊழியர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், இன்னும் சிலர் டேட் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கவனம்

ஆபீஸ் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மிக்ஸ் ஆக கூடாது என்பதிலும் கூட பெண்களே சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கிறார்களாம். ஆபீஸ் ரொமான்ஸ் வேண்டாம் எனச் சொல்வோரில் 29% பேர் பெண்களாக உள்ளனர். அதேநேரம் ஆண்களில் 27% பேர் ஆபீஸ் ரொமான்ஸை தவிர்க்கிறார்களாம்.!

வயது வாரியாக பார்த்தாலும் கூட இதில் ஒரு மிகப் பெரிய மாற்றம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது இளம் தலைமுறையினர் ஆபீஸ் ரொமான்ஸில் அதிகம் இருப்பார்கள் என நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் இதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனராம். அந்த வயதுடையவர்களில் சுமார் 34% பேர் இத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

திருமணத்தைத் தாண்டிய உறவு

அதேபோல திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளைத் தேடுவோருக்கான டேட்டிங் செயலியான கிளீடன் (Gleeden) நடத்திய ஆய்விலும் நமது நாட்டில் ஓபன் திருமணங்கள் அதிகரித்துள்ளது தெரிகிறது. அதாவது திருமண உறவில் இருக்கும்போதே, பார்ட்னர் சம்மதத்தோடு வேறு ஒருவருடன் உறவு கொள்வதே இந்த ஓபன் திருமணமாகும்.

இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 35% இந்தியர்கள் ஓபன் திருமண முறையில் இருக்கிறார்கள். மேலும், 41% பேர் இந்தியர்கள் தங்கள் பார்ட்னர் ஒப்புக்கொண்டால் அத்தகைய உறவில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த டிரெண்ட் பெருநகரங்களில் மட்டுமல்ல 2ம் கட்ட நகரங்களிலும் காணப்படுகிறது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் அதிக ஆர்வம் காட்டும் நகரமாக காஞ்சிபுரம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாம் மற்றொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். காஞ்சிபுரம் தனி மாவட்டம் என்றாலும் அதன் கணிசமான பகுதி சென்னை புறநகராகவே இருக்கிறது. பல்வேறு ஐடி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளன. எனவே, அங்கு உள்ளூர் மக்களை தாண்டி பல்வேறு மாநில மக்களும் சில வெளிநாட்டினரும் கூட இருக்கிறார்கள். இப்படி பலதரப்பட்ட மக்கள் இருப்பதும் அங்கு கள்ள உறவு அதிகரிக்க இன்னொரு காரணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+