பாலின சமத்துவத்தை பாருங்க.. மட்டம்.. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பெரும் கஷ்டம்.. அழகிரி ஆவேசம்
சென்னை: பாலின சமத்துவம் இல்லாததால், பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். உலக அரங்கில், பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதையே இந்த குறியீட்டு அறிக்கை அம்பலப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருக்கிறது.

Recommended Video
பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விட, பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் தான் இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் வெற்று பேச்சுகளால் அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications