இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் பாசுமதி சர்ப்ரைஸ்! பெட்ரோல் விலை ஏறுதா? இந்தியாவுக்கு டபுள் சேலஞ்ச்
சென்னை: மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள மோதலானது, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்து என இருமுனைத் தாக்குதலை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது தொடுத்துள்ளது. இந்த போர் பதற்றத்தால் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான பாஸ்மதி அரிசி வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது..
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றமானது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால் கூட அது இந்தியாவிற்கு சுமார் 2 பில்லியன் டாலர் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எண்ணெய் இறக்குமதி
எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதிப்பதுடன், உள்நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கவும் காரணமாகிறது. இந்த பொருளாதாரத் தாக்கத்தின் ஒரு பகுதியாக, தற்போது இந்தியாவின் பெருமைமிகு பாஸ்மதி அரிசி ஏற்றுமதியும் கடுமையான சரிவைச் சந்தித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது..
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரினால் சுமார் 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்து பாதைகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுமார் 2 லட்சம் டன் அரிசி இந்தியத் துறைமுகங்களிலும், மேலும் 2 லட்சம் டன் அரிசி நடுக்கடலில் பயணத்தின் இடையிலும் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
போர் பதற்றம் காரணமாக காப்பீட்டு பிரீமியம் மற்றும் போர்க்கால கூடுதல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், சர்வதேச சரக்கு போக்குவரத்து கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பல்களுக்கான எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது..
பாஸ்மதி அரிசி விலை
இந்த போக்குவரத்து இடையூறுகளால் கடந்த சில நாட்களில் மட்டும் உள்நாட்டு சந்தையில் பாஸ்மதி அரிசியின் விலை சுமார் 10 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களின் முதலீடு முடங்கிப் போய் பெரும் நிதி நெருக்கடியை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
எனவே, துறைமுகங்களில் தேங்கியுள்ள சரக்குகளுக்கான சேமிப்புக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இந்த இக்கட்டான சூழலை "தவிர்க்க முடியாத ஒன்றாக" அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்திய வர்த்தகம்
அதுமட்டுமல்ல, இதனை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதங்களையும் தவிர்க்க முடியும். கொரோனா தொற்று காலக்கட்டத்தில் வழங்கப்பட்டது போன்ற கூடுதல் கடன் வசதிகள் மற்றும் கடனை திருப்பிசெலுத்தும் கால அவகாசத்தை வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவின் ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனை உறுதி செய்யவும் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நிவாரணங்களை அறிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications