மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்
மாமல்லபுரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்!
சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் இன்று 8.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்த கூடியதாகவும் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும் செயற்கைகோள்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

ஹைபிரிட்
இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 3500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட்
இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் இதுவாகத்தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

வானிலை
வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை போன்ற தகவல்களை இந்த ராக்கெட் மூலம் பெறலாம் என தெரிகிறது. இந்த செயற்கைக்கோளை ஒரு ஆண்டுக்கும் மேலாக மாணவர்கள் தயாரித்து வந்தனர். கணினி உதவியுடன் மென்பொருளை செயற்கைக்கோளுடன் வடிவமைத்து ஆய்வு செய்வதே அரசு பள்ளி மாணவர்களின் பணியாகும்.

செயற்கைக்கோள்
இந்த செயற்கைக்கோள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பிரிஹன் மும்பை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 150 செயற்கைகோள்களில் இரு செயற்கைகோள்களை பிரிஹன் மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தயாரித்தனர்.

போட்டித் தேர்வு
அந்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வு வைக்கப்பட்டு அதிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வைக்கப்பட்டன. பிறகு செயற்கைக்கோள், ராக்கெட் ஏவுதல் குறித்த பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டன. மும்பை பள்ளி மாணவர்கள் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அப்போது விமானத்தில் இருந்தவர்கள் இவர்கள் சிரூடையில் வந்ததை பார்த்துவிட்டு எங்கே செல்கிறீர்கள் என கேட்ட போது அந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications