Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

National Highway: இந்தியாவில் இப்படி ஒரு சாலையா? எல்லாமே சிவப்பு நிறம்.. எதுக்காக இந்த டிசைன் தெரியுமா? காரணம்தான் செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளை நிற கோடுகளை வாகன ஓட்டிகள் கவனித்து இருக்க கூடும். ஆனால் முற்றிலும் புதுமையாக சாலை முழுக்க சிவப்பு வர்ணத்துடன் முற்றிலும் புதுவிதமான வடிவமைப்பு கொண்ட சாலை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் இப்படி ஒரு சாலையா? என நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த புதிய வடிவமைப்புடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலைகளை அமைத்து வருகிறது. விபத்துக்களை தவிர்க்கவும், வனப்பகுதிகளை ஒட்டி அமைக்கப்படும் சாலைகளில் விலங்குகள் வாகனங்களில் அடிபடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

india-s-first-wildlife-friendly-highway-unveiled-nhai-s-innovative-nh-45-project-explained

சிவப்பு நிற டேபிள் டாப்புடன் சாலை

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வந்தது. அந்த வீடியோவில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சிவப்பு நிறத்தில் பாக்ஸ்போன்று பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்த காட்சிகள் இருந்தன. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏஐ வீடியோவாக இருக்குமோ என நினைத்தனர்.

ஆனால் உண்மையாகவே இப்படியான ஒரு சாலை நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சலை 45ல் தான் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளில்ன் பாதுகாப்பு கருதி இப்படியான ஒரு சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. வீரன்கனா துர்காவதி புலிகள் காப்பகம் சரணலாயத்தை ஒட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிவப்பு நிற டேபிள் டாப்புடன் சாலை போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதே மாதிரியான சாலைகளா?

துபாயின் ஷேக் சயீத் சாலையால் ஈர்க்கப்பட்டு 'டேபிள்-டாப்' சிவப்பு அடையாளம் 5 மி.மீ தடிமனுடன் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் சற்றே உயர்த்தப்பட்ட அளவில், இந்த சிவப்பு மேற்பரப்பு இருக்கும் என்பதால், இந்த சாலை வழியாக டிரை ஓட்டுநர்களுக்கு அசௌகரியமோ திடீர் பிரேக்கோ இல்லாமல் வாகன வேகத்தை இயற்கையாகக் குறைக்க உதவுகிறது.

இதனால், வனப்பகுதிகளில் வாகனங்களில் வன விலங்குகள் அடிபடுவது மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது பலனளிக்கும் பட்சத்தில் நாடு முழுவதும் வனப்பகுதிகளில் இதே மாதிரியான சாலைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய பிரதேச சுற்றுலாத்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில் , கூறியிருப்பதாவது:-

வன விலங்குகள் மீது மோதாமல் இருக்க

வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டும் இல்லை. இந்தியாவின் இதயத்தை பாதுகாக்கும் புனிதமான பணியாகும். வனவிலங்குகளை பாதுகாக்கும் அர்ப்பணிப்பு முயற்சியாக மத்திய பிரதேசத்தில் முதல் முறையாக தேசிய நெடுஞ்சாலையில் சிவப்பு நிறம் மேற்பகுதியில் அடிக்கப்பட்டுள்ளது. 11.9 கிலோ மீட்டருக்கு ஹைவேயை விரிவாக்கும் திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த புதிய முயற்சியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

5 மி.மீட்டர் தடினம் கொண்ட இந்த சிவப்பு மார்க்கிங், வாகன ஓட்டிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளை கடக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையில் வாகனத்தில் அதிர்வை ஏற்படுத்தும். இதனால், வாகன ஒட்டிகள் வேகத்தை குறைத்து, விலங்குகள்- வாகன மோதல் ஏற்படுவதை தவிர்க்க உதவும். இதனால் வனவிலங்குகள் காடு முழுவதும் பாதுகாப்பாக நடமாட இந்த புதிய முயற்சி அனுமதிக்கும்" என்று பதிவிட்டுள்ளது.

சாலை எங்கே உள்ளது?

ஹிரன் - சிந்தூர் செல்லும் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலை 45-ல் இந்த சாலை உள்ளது. போபாலையும் ஜபல்பூரையும் இணைக்கும் விதமாக இந்த சாலை உள்ளது. ஜபல்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் அடிக்கடி வனவிலங்கு நடமாடும். புலிகள், மான்கள், நரிகள் உள்ளிட்டவை இந்த வனப்பகுதிகளில் வசிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+