காலத்தை பின்னோக்கி மாற்ற விரும்பும் இந்தியா.. 27 நிமிடங்கள் பின்னோக்கிச் செல்வது சாத்தியமா?
சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்றவில்லை.. காலத்தையே மாற்றியிருந்தனர். ஆங்கிலேயே காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் காலணி ஆதிக்கத்தை நினைவுப்படுத்தும் சட்டங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரமே நேரத்தை அளவிடும் உலகின் மையப் புள்ளியாக இருந்தது. ஆனால் ஆங்கிலேயேர்கள் அதனை மாற்றினார்கள். இந்நிலையில் மீண்டும் அதேபோல் மாற்ற இந்தியா திட்டமிடுகிறது. அப்படி செய்தால் வழக்கமான நேரத்தை விட 27 நிமிடங்கள் பின்னோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் சாத்தியமே இல்லை என்கிறார்கள்.
இந்தியாவின் காலக்கணக்கீடு என்பது லண்டனில் உள்ள கிரீன்விச் நேரத்தைப் பின்பற்றுவது போல, பண்டைய காலத்தில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி தான் உலகின் மையப்புள்ளியாக பண்டைய வானியல் அறிஞர்கள் ( கி.பி. 4-ம் நூற்றாண்டிலேயே வராஹமிஹிரர் மற்றும் ஆர்யபட்டர் போன்ற இந்திய வானியல் மேதைகள்) நம்பினார்கள்.

காலத்தின் கடவுள்
ஏனெனில் பூமியின் நிலநடுக்க கோடும், கடக ரேகையும் சந்திக்கும் நேர்க்கோட்டில் உஜ்ஜயினி அமைந்திருப்பதால், இது நேரத்தை கணக்கிட மிகச்சரியான இடமாக கருதினார்கள். அத்துடன் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோவில், 'காலத்தின் கடவுளாக' போற்றப்படுவதும், அங்கிருக்கும் 'ஜந்தர் மந்தர்' வானியல் ஆய்வகம் அன்றே துல்லியமான காலக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டது. இது பூமியின் மத்திய ரேகைக்கும் வட துருவத்திற்கும் இடைப்பட்ட தூரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது.
சூரியன் உஜ்ஜயினிக்கு இரண்டு முறை வரும்
ஆண்டுக்கு இரண்டு முறை, சூரியன் உஜ்ஜயினிக்கு நேர் உச்சியில் வருவதால், நிழல்களின் அளவை வைத்து நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. இதனால் கிரகணங்கள், கோள்களின் இயக்கம் ஆகியவற்றை ஆராய உஜ்ஜயினி சிறந்த இடமாக கருதப்பட்டது. நமது பஞ்சாங்கங்கள் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகள் ஏற்கனவே உஜ்ஜயினி நேரத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க்கிறது. ஆனால் ஆங்கிலேயர்கள், இந்த நேரக் கணக்கீட்டினை மாற்றி 1905-ம் ஆண்டு இந்தியத் திட்ட நேரம் (ஐ.எஸ்.டி.) என்பதனை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினார்கள்.
2 மணி நேர வித்தியாசம்
இந்த நடைமுறை என்பது உத்தரப்பிரதேசத்தின், அலகாபாத் அருகே மிர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 கிழக்கு தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்டது. தற்போது உலகளாவிய கிரீன்விச் சராசரி நேரத்தை விட (ஜி.எம்.டி.) இந்தியா 5 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களுக்கும் (அசாம், அருணாசல பிரதேசம்), மேற்கு மாநிலங்களுக்கும் (குஜராத்) இடையே சூரிய உதயத்தில் சுமார் 2 மணி நேர வித்தியாசம் இருந்து வருகிறது.
மத்திய கல்வி அமைச்சர் கருத்து
இதுபற்றி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கூறுகையில், இந்தியத் திட்ட நேரத்திற்குப் பதிலாக 'மஹாகால் ஸ்டாண்டர்டு டைம்' எனப் பெயரிட ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார் . மத்திய அரசு திட்டம் என்னவென்றால், உலக நேரக் கணக்கீட்டின் தொடக்கப்புள்ளி லண்டனில் உள்ள கிரீன்விச் அல்ல, மாறாக இந்தியாவின் உஜ்ஜயினிதான் என்பதை உலகிற்கே தெரிய வைப்பது தான்.. அத்துடன் ஆங்கிலேயர்களின் அடையாளங்களை அகற்றி, பழங்கால கால முறையை நவீன அறிவியலுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
27 நிமிடங்கள் பின்னால் போகும்
உண்மையில் இந்த 'மஹாகால் ஸ்டாண்டர்டு டைம்' (எம்.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்தால், அது இந்தியாவின் காலக் கணக்கீட்டில் கலாசார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சில முக்கிய மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். மிக முக்கியமாக இந்திய நேரமானது தற்போதைய நேரத்தை விட சுமார் 27 நிமிடங்கள் பின்னோக்கி சென்றுவிடும்.
நேரம் மாறும்
அதாவது, இப்போது மணி காலை 6 மணி என்றால், புதிய முறைப்படி 5 மணி 33 நிமிடங்களாக மாறிவிடும். மேலும் உலக நேரத்தின் தொடக்கப்புள்ளியாக (பிரைம் மெரிடியன்) லண்டனில் உள்ள கிரீன்விச் கருதப்படுவதற்குப் பதிலாக, வரலாற்று ரீதியாக இந்தியாவின் உஜ்ஜயினிக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மாற்றினால் இந்தியாவில் உள்ள அனைத்து கணினிகள், ஸ்மார்ட்போன்கள், கடிகாரங்கள் மற்றும் சர்வர்களில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் பங்குச் சந்தை நேரங்கள் வரை அனைத்திலும் மாற்றங்கள் வரும்.
சாத்தியமே இல்லை
ஆனால் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை என்பது தான் எதார்த்தம். பண்டைய காலத்தில் உஜ்ஜயினி நேரத்தை அடிப்படை இருந்தது உண்மைதான்- ஆனால் இன்றுள்ள கம்யூட்டரை அடிப்படையாக கொண்ட உலகில் ண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத காரியம். ஏனெனில் இன்று உலகம் முழுவதும் UTC மற்றும் GMT அடிப்படையில்தான் நேரங்கள் உள்ளன. சர்வதேசப் பங்குச்சந்தைகள், விமானப் போக்குவரத்து, மற்றும் கடல்வழிப் போக்குவரத்து அனைத்தும் இந்த ஒரு புள்ளியை மையமாக வைத்தே பிணைக்கப்பட்டிருக்கிறது.
குழப்பம் ஏற்படும்
நாம் இந்திய நேரத்தின் மையப்புள்ளியை மாற்றினால், சர்வதேச அளவில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் அல்லது தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கி முதல் சாதாரண UPI பரிவர்த்தனை வரை அனைத்தும் 'Timestamp' எனப்படும் கால முத்திரையை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதால் சிக்கல் ஏற்படும். ஏனெனில் கணினிக் கட்டமைப்பில் ஒரு வினாடி மாற்றம் ஏற்பட்டால் கூட, கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் தோல்வியடையும் இதனை மாற்ற வேண்டும் என்றால், ஒட்டுமொத்த மென்பொருள் கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். இது பல லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் வேலை என்பதால் சாத்தியம் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
-
அமெரிக்காவின் மூவ்.. லாக்டவுனில் சிக்கப்போகும் இந்தியா.. இன்னைக்கு நைட்டு விஷயம் தெரிஞ்சிடும்! -
"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி














Click it and Unblock the Notifications